Author Topic: பாலக் - ஆலு - கேரட் சப்ஜி  (Read 529 times)

Offline kanmani

என்னென்ன தேவை?

பாலக் கீரை நறுக்கியது - 1/2 கட்டு,
உருளைக்கிழங்கு - 2, கேரட் - 1,
வெங்காயம் - 1,
தக்காளி - 2.

வறுத்துப் பொடிக்க...

தனியா - 1 டீஸ்பூன்,
மிளகு - 1/2 டீஸ்பூன்,
மிளகாய் - 3,
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்,
உப்பு, மல்லி தூள், கடுகு - சிறிதளவு.

எப்படிச் செய்வது? 

காய்களை சதுரமாக வெட்டவும். கீரையை அலசவும். கடாயில் எண்ணெய் காயவிட்டு கடுகு தாளிக்கவும். மல்லி தூள் சேர்த்து காய்களை சேர்த்து  நன்கு வதக்கி எடுக்கவும். இன்னொரு கடாயில் சிறிது எண்ணெயில் பாலக் கீரையை தனியே நிறம் மாறாமல் உப்பு சேர்க்காமல் (உப்பு சேர்த்தால்  நிறம் மாறிவிடும்) வதக்கி எடுக்கவும். பிறகு கீரையை வதக்கிய காய்களுடன் சேர்த்து வறுத்துப் பொடித்தவற்றை மேலே தூவி உப்புச் சேர்த்து மேலும்  ஒரு நிமிடம் வதக்கி எடுத்து வைக்கவும்.