Author Topic: ரவா மசாலா கிச்சடி  (Read 474 times)

Offline kanmani

ரவா மசாலா கிச்சடி
« on: April 19, 2014, 06:28:19 PM »
என்னென்ன தேவை?

ரவை - 2 கப்,
தண்ணீர் - 4 கப்,
உப்பு - தேவையான அளவு,
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்,
கரம் மசாலா - 1 டீஸ்பூன்,
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1/2 கப்,
இஞ்சி - (சிறியதாக நறுக்கியது) 1 இஞ்ச்,
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 1/2 டீஸ்பூன்,
நறுக்கிய கேரட் - 1 கப்,
பட்டாணி - 1 கப்,
நெய் - சிறிதளவு,
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்.

தாளிக்க...

எண்ணெய் - 1/4 கப்,
கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு - 1 டீஸ்பூன்.
எப்படிச் செய்வது?

சிறிதளவு நெய்யில் ரவையை சிவப்பாக வறுத்துக் கொள்ளவும். அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் விடவும். கடுகு, உ.பருப்பு, க.பருப்பு போட்டு  சிவக்க வறுக்கவும். பிறகு இஞ்சி, பச்சை மிளகாய் சேர்க்கவும். வெங்காயம், காய்கறிகள், பச்சை மிளகாய், பட்டாணி சேர்த்து வதக்கவும். கரம் மசாலா,  மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்க்கவும். இப்போது நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும். தண்ணீர் விடவும். உப்புச் சேர்த்து கொதிக்கவிடவும். வறுத்து  வைத்த ரவையை சிறிது சிறிதாகப் போட்டுக் கிளறவும். நன்றாக வெந்தவுடன் கொத்தமல்லி தூவி நெய்விட்டு இறக்கவும்.