Author Topic: ரவாவிவிக்காய்  (Read 445 times)

Offline kanmani

ரவாவிவிக்காய்
« on: April 19, 2014, 06:27:02 PM »
என்னென்ன தேவை?

ரவை - 1 1/2 கப்,
தேங்காய்த் துருவல் - 1/2 கப்,
சர்க்கரை - ஒரு சிட்டிகை,
சமையல் சோடா - 1/2 டீஸ்பூன்,
பொடித்த முந்திரி, திராட்சை, பாதாம் - தலா ஒரு டேபிள்ஸ்பூன்,
உப்பு - ஒரு சிட்டிகை,
தேங்காய்ப் பால் - 1 கப் (கலக்க),
கரகரப்பாக உடைத்த மிளகு, சீரகம் - தலா 1 டேபிள்ஸ்பூன்,  வெண்ணெய் - 1/2 கப்,
எண்ணெய் - 1/4 கப்,
பேக்கிங் பவுடர் - 1/2 டீஸ்பூன்.

டாட் செய்வதற்கு...

அதாவது,கலவையை செட் செய்தபின் துளித்துளியாக வைப்பதற்கு - வெண்ணெய் மற்றும் பொடியாக நறுக்கிய நட்ஸ்தேவையான அளவு.

எப்படிச் செய்வது? 

ரவையை வறுத்துக் கொள்ளவும். ஆறவிட்டு ரவையுடன் உப்பு, தேங்காய்த் துருவல், பொடித்த நட்ஸ், மிளகு, சீரகம், சர்க்கரை, பேக்கிங் பவுடர்,  சமையல் சோடா எல்லாவற்றையும் கலக்கவும். இத்துடன் வெண்ணெய், எண்ணெய், தேங்காய்ப் பால் சேர்த்து கலந்து ஒரு கேக் டிரேயில் ஊற்றவும்.  (இட்லி மாவு பதத்துக்கு இருக்க வேண்டும்). அதை அப்படியே 10 நிமிடங்களுக்கு வைத்திருக்கவும். பிறகு, அதற்கு மேல் டாட் செய்யவும். (நடுவில்  வெண்ணெய் வைத்து பொடித்த நட்ஸ் தூவவும்). மைக்ரோவேவ் அவனில் பேக் செய்யவும். அல்லது குக்கரில் வெயிட் வைக்காமல், குக்கரின் அடியில்  மணல் போட்டு வைக்கவும். கேக் டிரேயை எடுக்கும் போது கவனமாக மணல் ஒட்டாமல் எடுக்கவும்.