எதிர் பார்ப்புகளுக்கு இடையே
தோன்றும் உறவுகளில்,
எதிர் பார்ப்பு இல்லாமல் தோன்றும்
உறவு நட்பு ஒன்றே!
ஐந்தில் வளையாதது ஐம்பதில்
வளையாது என்ற பொன்மொழியும்
தோற்றது, ஐந்தில் உதயமாகி ஐம்பதை
கடந்தும் நிலைத்து நிற்க்கும் நட்பிடம்!
ஜாதி, மதம், இனம்,மொழி,
இவைகளும் நட்பிடம் கைகோர்த்து
நிற்கும் கலவரமாய் அல்ல
காதலனாய்!
உறவுகளுக்கு எத்தனையோ
பெயர்கள் உண்டு, ஆனால்
ஒரே பெயரை உறவாய் கொண்டது
நட்பு மட்டுமே!
கண் கலங்கும் வேளைகளில்
கண்ணீர் துடைக்க கரங்கள்
உண்டென்று உணர்த்தும் உறவு
நட்பு ஒன்றே!
மாதா, பிதா, குரு, தெய்வம்,
சேர்க்க மறந்து விட்டார்கள்
போலும் இந்நான்கின் நாயகன்
நண்பனை!
நட்பு, மூன்று எழுத்துதான் ஆனால்
மூவுலகமும் போற்றும் உறவு,
நல்ல நண்பன் என்பவன் பிரிக்க
முடியா உறவாய், நிழல் உருவாய்
நிற்பவனே!
அவனே என் நண்பன்!!!
நன்பேண்டா!!!!!!!!!!!!!!!!!!!!!