Author Topic: ~ வாயுக்கோளாறு நீங்க -பாட்டி வைத்தியம்:- ~  (Read 472 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 227458
  • Total likes: 29058
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
வாயுக்கோளாறு நீங்க -பாட்டி வைத்தியம்:-




முருங்கைக்கீரையைப் பூண்டு, உப்பு, மஞ்சள் சேர்த்து அவித்து தினமும் சாப்பிட்டால் வாயுக் கோளாறுகள் சரியாகும்.

கறிவேப்பிலையை உலர்த்தி கால் கிலோ அளவு எடுத்துப் பொடியாக்கி, அதில் 25 கிராம் பெருங்காயத்தூள் சேர்த்து தினமும் உணவுக்குப் பிறகு 2 கிராம் அளவு சாப்பிட்டால் வாயுக்கோளாறுகள் நீங்கும்.

வெந்தயக் கீரையுடன் சிறிது ஓமம் சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால் வாயுக் கோளாறுகள் நீங்கும்.

பிரண்டை (காய்ந்தது), இலந்தை இலை (காய்ந்தது) ஓமம் (சிறிது) மூன்றையும் சேர்த்துக் கஷாயமாக்கி சாப்பிட்டால் வாயுக் கோளாறுகள் தீரும்.

நல்வேளைக் கீரையை (கால் கிலோ) உலர்த்தி, வாய்விளங்கம், ஓமம், மிளகு ஆகியவற்றைத் தலா 50 கிராம் சேர்த்து பொடியாக்கி, தினமும் காலை மாலை இரு வேளையும் 2 கிராம் அளவு வெந்நீரில் கலந்து சாப்பிட்டால் வாயுக்கோளாறுகள் அனைத்தும் விலகும்.

வாதநாராயணன் கீரையை பூண்டு சேர்த்து அவித்துச் சாப்பிட்டால் வாயுப் பிரச்னைகள், வயிற்றுப் பொருமல் போன்றவை தீரும்.

சுக்காங் கீரையுடன் சிறிது ஓமம், மஞ்சள் இரண்டையும் சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால் வாயுக்கோளாறுகள் குணமாகும்.

முள்ளிக்கீரையுடன் பூண்டு, சீரகம் சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால் நீர்க்கட்டு, நீர்க்கடுப்பு போன்றவை மறையும்.

வங்கார வள்ளைக் கீரையுடன் மிளகு, பூண்டு, பெருங்காயம் ஆகியவற்றைச் சேர்த்து அவித்துச் சாப்பிட்டால் வாயுக் கோளாறுகள் நீங்கும்.

பரட்டைக் கீரையுடன் பூண்டு, மிளகு, ஓமம் ஆகியவற்றைச் சேர்த்து அவித்துச் சாப்பிட்டால் வாயுக் கோளாறுகள், பெருவயிறு குணமாகும்.