Author Topic: ~ முதலுதவி - ஆபத்தான நேரத்தில் உயிர் காக்கும் முதல் சிகிச்சை:- ~  (Read 407 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 227458
  • Total likes: 29058
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
முதலுதவி - ஆபத்தான நேரத்தில் உயிர் காக்கும் முதல் சிகிச்சை:-




முதலுதவியின் முக்கியத்துவம்:

முதலுதவி என்பது திடீரென காயப்பட்ட அல்லது நோய்வாய்ப்பட்ட ஒருவருக்கு உரிய வைத்திய உதவி கிடைக்கும் வரை சுற்றுச் சூழலில் கிடைத்த வசதிகளைப் பயன்படுத்தி அதற்கென பரிந்துரைக்கப்பட்ட முறையில் உயிரைக் காப்பதற்கு அல்லது தக்கவைத்துக் கொள்வதற்கு வழங்கப்படும் ஒரு அவசர உடனடி உதவி ஆகும்.

முதலுதவி வழங்குபவர் ஒரு மருத்துவராகவோ அல்லது மருத்துவர் அல்லாதவராகவோ இருக்கலாம். ஆனால் உடனடியாக பாதிக்கப்பட்டவரின் நோயின் தன்மையை உணர்ந்து அதற்கு உரிய சரியான உதவிகளை வழங்கக்கூடியவராகவும், பதற்றம் அடையாதவராகவும் இருத்தல் அவசியம்.

தகுந்த முதலுதவி கொடுக்கப்படாத காரணத்தாலும் அறியாமையினால் பிழையான முதல் உதவி வழங்கப்படுதலாலும் பல உயிர்கள் ஆபத்தான நிலைக்குத் தள்ளப்படுகின்றன,

விளையாட்டு, வாகன விபத்துகள், சண்டைகள், தவறி விழுதல், இருதய உபாதைகள், மாசு நிறைந்த சூழ்நிலையில் வாழ்தல், இரசாயன கலவைகளின் பாவனை, தவறான மின் பாவனை, கட்டுப் பாடற்ற நெருப்பு பாவனை, இயற்கையின் சீற்றங்கள் என்பவற்றால் எதிர்பாராத விதமாக திடீரென ஒருவரோ அல்லது பலரோ ஆபத்தான நிலைக்கு ஆளாகின்றார்கள்.

இவர்கள் எமது உறவினர்களாகவோ, நண்பர்களாவோ அல்லது அறியாத ஒருவராகவோ இருக்கலாம். அவர்களுக்கு தகுந்த முதலுதவி அளித்து அவர்களின் உயிரைக் காப்பாற்ற வேண்டியது ஒவ்வொருவரினதும் கடமையாகும். நாம் எல்லோரும் தகுதிவாய்ந்த முதலுதவியாளராக இருந்தால் மட்டுமே எம்மால் அவர்களைக் காப்பற்ற முடியும். அவர்கள் மீது இருக்கும் பாசத்தால் அல்லது அவர்கள் படும் கஸ்டங்களை சகிக்க முடியாது இரக்கப்பட்டு அவர்களைக் காப்பாற்றுவதாக எண்ணி நாம் தவறான முறையில் முதலுதவி வழங்கினால் அவர்கள் மேலும் ஆபத்தான நிலைக்கு தள்ளப்பட்டு விடுகின்றார்கள்.

எனவே நாம் ஒவ்வொருவரும், ஆபத்தாக நோய்வாய்பட்டிருக்கும் ஒருவருக்கு சரியான முறையில் முதலுதவி அளிக்க கற்றுக் கொள்ளல் அவசியமாகின்றது. இது போன்ற முதலுதவி பயிற்சிகள் Red Cross, St.John Ambulance, போன்ற பல நிறுவகனங்களால் எல்லா நாடுகளிலும் பயிற்றப்படுகின்றன.

முதலுதவி சிகிச்சை முறைகள் சூழ்நிலக்கேற்ப, பாதிக்கப்பட்டவரின் நிலைமைக்கேற்ப வித்தியாசமாக அமையும்.
சில பொதுவான விதி முறைகளை எல்லோரும் அறிந்து கொள்ளும் நோக்கோடு கீழே பகிர்ந்து கொள்கின்றோம்.

முதலுதவியின் குறிக்கோள்
1. உயிரைப் பாதுகாத்தல்:
2. நிலைமை மேலும் மோசமடையாமல் தடுத்தல்
3. சீக்கிரத்தில குணமளிக்க முன் ஏற்பாடு செய்தல்.

முதலுதவி செய்யமுன்ன கவனிக்க வேண்டியவை
1. முதலுதவியாளர் தமது பாதுகாப்பை உறுதிப்படுத்தல்.
2. சுற்றுச் சூழலை அவதானித்துப் பாதுக்காப்பை உறுத்திப்படுத்தல்.
3. நோயாளருக்கு உதவியளித்தல்.

அடிப்படை முதலுதவிக் குறிப்புகள்

1. முதலுதவி வசதிகளுடன் கூடிய முதலுதவிப் பெட்டியை எப்போதும் வீட்டில் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். அதில் அவசர தேவைக்கான மருந்துகள் இருத்தல் வேண்டும்.

2. முதலுதவிப் பெட்டி மற்றும் மருந்துகளை குழந்தைகளின் கைகளுக்கு எட்டாத இடத்தில் வைக்க வேண்டும்.

3. பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலுதவி செய்யும் பொழுது, முதலுதவி செய்யும் நபரின் பாதுகாப்பைக் கவனத்தில் கொள்ளல் அவசியம்.

4. அவசர சூழ்நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் இயல்பாக மூச்சுவிடுவதற்குத் தேவையான சூழ்நிலையினை ஏற்படுத்தித் தர வேண்டும். இல்லையெனில் செயற்கை சுவாசத்திற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.

5. பாதிக்கப்பட்ட நபரின் உடலில் இருந்து இரத்தம் அதிகமாக வெளியேறும் நிலையிலும், பாதிக்கப்பட்ட நபர் விஷம் உட்கொண்ட நிலையிலும், இதய மற்றும் சுவாச இயக்கங்கள் நிற்பது போன்ற நிலையிலும் மிகவும் வேகமாக செயல்படுதல் அவசியம். ஒவ்வொரு விநாடியும் மிக மிக முக்கியமானதாகும்.

6. பாதிக்கப்பட்டவர்கள் கழுத்திலோ அல்லது பின்புறத்திலோ காயம் இருந்தால் உடனே மருத்துவ வசதி அளிக்க வேண்டும். வாந்தி செய்து ஆபத்துக் கட்டத்தைத் தாண்டி விட்டால், ஒருசாய்த்துப் படுக்க வைத்து வெது வெதுப்பாக வைப்பதற்கு போர்வை அல்லது கம்பளியால் போர்த்தி விட வேண்டும்.

7. முதலுதவி அளிக்கும் போதே மருத்துவ உதவிக்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்

8. அமைதியாய் இருந்து பாதிக்கபட்டவருக்கு மனதைரியத்தை அளிக்க வேண்டும்

9. பாதிக்கப்பட்ட நபர் மயக்க நிலையில் இருக்கும் போது திரவப்பொருட்களை எதையும் கொடுக்கக்கூடாது.

10. பாதிக்கப்பட்ட நபரின் மருத்துவ அடையாள அட்டை மற்றும் அவர்களுக்கு ஒவ்வாமை தரும் மருந்துகளின் குறிப்புகள் ஆகியவற்றைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

முதலுதவி கருவிப் பெட்டி (First aid kit) என்பது துணைக்கலப் பொருட்களையும், கருவிகளையும் சேகரித்து வைத்து முதலுதவி அளிப்பதற்குப் பயன்படுவது ஆகும்.

[1]. முதலுதவி கருவிப் பெட்டிகள் என்பது யார் என்ன காரணத்திற்காக தயாரிக்கின்றனர் என்பதைப் பொறுத்து வேறுபட்ட பொருட்களைக் கொண்டு உருவாக்கப்படலாம். அது அரசாங்கம் அல்லது நிறுவனங்களுக்கிடையேயான வேறுபட்ட அறிவுரைகள் அல்லது சட்டங்களைப் பொறுத்து ஒவ்வொரு பகுதிகளிலும் மாறுபடலாம்.

உங்கள் பணியிடங்களில் தேவைப்படும் முதலுதவி வசதிகளின் வகைகள் பின்வருவனவற்றால் தீர்மானிக்கப்படுகின்றன:
• நீங்கள் வாழும் மாநிலம் அல்லது பிரதேசத்தின் சட்டங்கள் மற்றும் விதிமுறைகள்;
• நீங்கள் பணிபுரியும் தொழில்துறையின் வகை (சுரங்கத்தொழில் போன்ற தொழில்துறைகள் தனிச்சிறப்பான வழிமுறைகளுடன் விவரிக்கப்பட்ட குறிப்பிட்ட தொழில்துறை விதிமுறைகளைக் கொண்டிருக்கலாம்);
• உங்கள் பணியிடங்களில் விளையக்கூடிய தீங்குகளின் வகை;
• உங்கள் பணியிடங்களில் உள்ள பணியாளர்களின் எண்ணிக்கை;
• உங்கள் பணியிடம் பரவியிருக்கின்ற வேறுபட்ட இடங்களின் எண்ணிக்கை;
• அருகாமையில் கிடைக்கும் உள்ளூர் சேவைகள் (மருத்துவர்கள், மருத்துவமனை, முதலுதவி வண்டி).
முதலுதவி வசதி உங்கள் பணியிடங்களின் தேவைகளை கண்டிப்பாக நிறைவுச் செய்ய வேண்டும். வசதிகள் என்பது முதலுதவி கருவித் தொகுப்புகளை அல்லது ஓய்வறைகளை உள்ளடக்கியது.

உங்கள் பணியிடங்கள் சுழற்சி பணிமுறைமாற்றங்களில் இயங்கினால், ஒவ்வொரு பணிமுறைமாற்றங்களிலும் ஒரு முதலுதவி தெரிந்த நபரை நியமித்திருக்க வேண்டும். உங்கள் பணியிடத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட முதலுதவி நியமனங்கள் கொண்டிருப்பது பணியிடத்தில் ஏதாவது ஒரு பணி முறைமாற்றத்தின்போது ஒருவர் வரவில்லை என்றாலும் மற்றொருவர் பார்த்துக்கொள்ள முடிவதும் மிகச்சிறந்ததே.
பொதுவாக உள்ளடக்கமாக கட்டுத் துணிகள், CPR (இதய இயக்க மீட்பு சுவாசம்) இயக்குவதற்கான சுவாசத் தடைகள் போன்ற இரத்தப்போக்கினை கட்டுப்படுத்த உதவும் பொருட்கள் அடங்கியிருக்கின்றன. மேலும் சில மருந்துகளையும் கொண்டிருக்கலாம்.

வெட்டுக்காயங்களுக்கான முதலுதவி
1. காயம்பட்ட இடத்தை சோப்பு மற்றும் தண்ணீரால் சுத்தமாக கழுவிவிட வேண்டும்.
2. இரத்தம் நிற்கும் வரை அழுத்தம் கொடுக்க வேண்டும்.
3. காயத்தைக் கட்டுவதற்று சுத்திகரிக்கப்பட்ட பேண்டேஜ் துணியை உபயோகப்படுத்த வேண்டும்.
4. ஆழமான காயமாக இருந்தால் உடனடியாக மருத்துவரிடம் அழைத்துச் செல்ல வேண்டும்.

சிறுகாயங்கள் மற்றும் சிராய்ப்புகள்
1. வெதுவெதுப்பான நீரில் சோப்பினால் காயத்தினை நன்றாக கழுவ வேண்டும்.
2. இரத்தக்கசிவு இருப்பின் சுத்தமான பேண்டேஜ் துணியினால் காயத்தினைக் கட்ட வேண்டும். இது காயத்தின் மீது தொற்று ஏற்படுவதைத் தவிர்க்கிறது.

மாரடைப்பின் போது எடுக்கவேண்டிய முதலுதவி
பாதிப்பு ஏற்பட்ட நபரை படுக்க வைக்கவும், பின் அவரது நாக்கின் அடியில் ஆஸ்பிரின் மாத்திரையை, சோர்பிட்ரேட்(sorbitrate) மாத்திரயுடன் சேர்த்து வைத்து விடவும் (இருக்கும் பட்சத்தில்). உடனே தாமதிக்காமல் இதய சிறப்பு மருத்துவரிடம் கூட்டி செல்லவும். பெரும்பாலான பாதிப்புகள் முதல் ஒரு மணி நேரத்திலேயே ஏற்படுகிறது.

தீக்காயங்களுக்கான முதலுதவி
1. ஒரு குழந்தையின் துணியினை தீ பற்றிக் கொண்டால், விரைவாக கம்பளம் அல்லது பிற துணியினால் அக்குழந்தையை சுற்றியோ அவர்களை தரையில் உருட்டியோ தீயை அணைக்க வேண்டும்.
2. தீக்காயம் ஏற்பட்ட இடத்தை உடனடியாக குளிர்விக்க வேண்டும். நிறைய குளிர்ந்த, சுத்தமான தண்ணீரை பயன்படுத்த வேண்டும். தீக்காயம் பெரியதாக இருந்தால், குழந்தையை குளிர்ந்த நீர் உள்ள குளிக்கும் தொட்டி அல்லது பேசினில் வைக்க வேண்டும். இச்செய்கையானது தீக்காயமடைந்த இடத்தை குளிர்விக்க 30 நிமிடம் வரை எடுத்துக் கொள்ளலாம்
3. தீக்காயமடைந்த இடத்தை சுத்தமாகவும் மற்றும் வறட்சியாகவும் வைத்துக் கொள்ள வேண்டும். கட்டுத்துணியினால் தளர்ந்த நிலையில் கட்டி பாதுகாக்க வேண்டும். தீக்காயமானது நாணையத்தைவிட பெரியதாக இருந்தாலோ அல்லது கொப்புளங்கள் ஏற்பட்டாலோ குழந்தையை சுகாதார பணியாளரிடம் எடுத்துச் செல்ல வேண்டும். கொப்புளங்களை உடைக்கக் கூடாது, அவை காயம்பட்ட இடங்களை பாதுகாக்கிறது.
4. தீக்காயத்தில் ஒட்டியுள்ள எந்த பொருளையும் நீக்கக்கூடாது. குளிர்ந்த நீரைத்தவிர எந்த ஒரு பொருளையும் தீக்காயத்தில் போடக்கூடாது.
5. குழந்தைக்கு பழச்சாறு அல்லது உப்பு மற்றும் சர்க்கரை கலந்த தண்ணீர் போன்ற திரவ உணவுகளைக் கொடுக்க வேண்டும்

மின்சாரபாதிப்புக்கான முதலுதவி
1. ஒரு குழந்தை மின்சாரத்தில் அகப்பட்டுக் கொண்டால், அல்லது மின்சாரத்தினால் தீக்காயம் ஏற்பட்டால், குழந்தையை தொடுவதற்கு முன்னர் மின்சாரத்தினை நிறுத்த வேண்டும். குழந்தை சுயநினைவினை இழந்தால், அதனை தகுந்த வெதுவெதுப்பான வெப்ப நிலையில் வைத்து, உடனடியாக மருத்துவ உதவியைப் பெறவும்.
2. குழந்தைக்கு சுவாசிப்பது கடினமாக தோன்றினாலோ அல்லது சுவாசமின்றி இருந்தாலோ, அக்குழந்தையை சமமான பகுதியில் படுக்கவைத்து, அவள் அல்லது அவனின் தலையை இலேசாக பின்புறமாக சாய்க்க வேண்டும். குழந்தையின் நாசித்துவாரத்தை மூடிக்கொண்டு, வாயின் வழியாக சுவாசக் காற்றை ஊதவேண்டும். குழந்தையின் மார்பு விரியும் வண்ணம், போதுமானளவு சுவாசத்தை ஊத வேண்டும். மூன்று வரை எண்ணி மீண்டும் ஊத வேண்டும். குழந்தை சுவாசிக்க தொடங்கும் வரை இவ்வாறு தொடர்ந்து செய்ய வேண்டும்.

மூச்சுத்திணறலுக்கான முதலுதவி
பிறந்த குழந்தையோ அல்லது சிறுகுழந்தையோ இருமினால் தடுக்க வேண்டாம். அவள் அல்லது அவன் கிருமி பொருளை வெளியேற்ற விட்டுவிட வேண்டும். அப்பொருள் விரைவாக வெளியில் வராவிட்டால், குழந்தையின் வாயிலிருந்து அப்பொருளை எடுக்க முயற்சிக்கவும்.

அப்பொருள் இன்னமும் குழந்தையின் தொண்டையில் அடைத்துக்கொண்டிருந்தால்,

பிறந்த மற்றும் சிறுகுழந்தைளுக்கு

தலை மற்றும் கழுத்தை தாங்கிப் பிடித்துக் கொள்ள வேண்டும். முகம் தரையை நோக்கிய வண்ணம், கால்கள் இருக்கும் மட்டத்திற்கு சற்றே கீழாக தலை இருக்கும் வகையில் குழந்தையை திருப்பவும். முதுகில், தோள்பட்டைகளுக்கு இடையில், ஐந்து முறை தட்ட வேண்டும். பின்பு, குழந்தையின் முகத்தை மேலே நேராக நிமிர்த்தி, மார்பெலும்பின் மேல் மார்புக்காம்புகளுக்கிடையில் உறுதியாக ஐந்து முறை அழுத்த வேண்டும். வாயில்/தொண்டையில் சிக்கி இருக்கும் பொருள் வெயியில் வரும் வரை இதை திரும்பத் திரும்ப செய்ய வேண்டும். அப்பொருளை உங்களால் வெயியே எடுக்க முடியாவிட்டால், உடனடியாக குழந்தையை அருகில் வைத்தியரிடம் எடுத்துச் செல்லவும்.

பெரிய குழந்தைகளுக்கு
உங்கள் புயங்கள் குழந்தையின் இடுப்பைச் சுற்றிய வண்ணமாக குழந்தைக்குப் பின்புறமாக நிற்க வேண்டும். மடக்கிய கைமுட்டியை குழந்தையின் உடலில் தொப்புள் மற்றும் மார்புக் கூட்டிற்கு இடையில் வைத்துக் கொள்ள வேண்டும். மறுகையின் முட்டியை முதல் வைத்த கைமுட்டியின் மேல் வைத்து உள்வெளியாக ஐந்து முறை குழந்தையின் வயிற்றில் அழுத்த வேண்டும். தொண்டையில் அடைபட்ட பொருள் வெயியேறும் வரை இதை திரும்பத்திரும்பச் செய்ய வேண்டும். அப்பொருளை உங்களால் வெயியே எடுக்க முடியாவிடில், உடனடியாக குழதையை அருகிலுள்ள சுகாதாரப் பணியாளரிடம் எடுத்துச் செல்லவும்.

தண்ணீரில் முழ்கினால்...
ஒருவர் தண்ணீரில் நீச்சல் தெரியாமல் முழ்கிவிட்டால் முதலில் அவரைக்காப்பாற்ற தண்ணீரில் குதிக்கும் போது கொஞ்சம் தள்ளி குதித்து அவரைத்தொடாமல் அவரின் தலை முடியைத்தான் பற்றித் தூக்கவேண்டும். அவருக்கு கிட்டச் சென்றால் அவர் உங்களை இறுக கட்டிப் பிடித்து தப்பிக்க முயல்வார். அதனால் உங்களால் ஒன்றும் செய்யமுடியாது இருவருமாக் மூழ்க வேண்டிய நிலை ஏற்படும். தண்ணீரில் மூழ்கியவரை காப்பாற்ற செல்பவர் அவரின் முன் பக்கமாகச் செல்லாது பிபக்கமாகவே சென்று தலைமயிரில் பிடித்து இழுக்க வேண்டும். அவர் தண்ணீர் குடித்து மயங்கி இருப்பார். மேலே கொண்டு வந்து அவரை தலைகீழாக தொங்க விட்டு வயிரை அமுத்த வேண்டும். வயிற்றுக்குள் இருக்கும் தண்ணீர் எல்லாம் வெளியே வந்தவுடன் அவருக்கு மயக்கம் தெளிந்து விடும். தண்ணீரில் முழ்கியவரை காப்பாற்றும் போது நிதானம் அவசியம்.