Author Topic: கத்திரிக்காய் வறுவல்  (Read 411 times)

Offline kanmani

கத்திரிக்காய் வறுவல்
« on: April 12, 2014, 06:59:40 PM »
தேவையான பொருட்கள்:

கத்திரிக்காய் - 1 மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள் - 1 சிட்டிகை கரம் மசாலா - 1 சிட்டிகை உப்பு - தேவையான அளவு எலுமிச்சை - பாதி எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

முதலில் கத்திரிக்காயை வட்டமாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் மிளகாய் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா மற்றும் உப்பு ஆகியவற்றை கத்திரிக்காயுடன் சேர்த்து நன்கு பிரட்டிக் கொள்ள வேண்டும். பின்பு ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி, பின் பிரட்டி வைத்துள்ள கத்திரிக்காய் துண்டுகளை கொஞ்சம் கொஞ்சமாக போட்டு, முன்னும் பின்னும் பொன்னிறமாக வறுத்து எடுத்து, ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு அதன் மேல் எலுமிச்சை சாற்றினை ஊற்றினால், சுவையான கத்திரிக்காய் வறுவல் ரெடி!!!