Author Topic: கத்தரிக்காய் ஊறுகாய்  (Read 595 times)

Offline kanmani

கத்தரிக்காய் ஊறுகாய்
« on: April 11, 2014, 11:09:58 PM »
என்னென்ன தேவை?

பிஞ்சுக் கத்தரிக்காய்    -500 கிராம்
மஞ்சள்தூள்    -கால் டீஸ்பூன்
புளி                    -சற்று பெரிய எலுமிச்சைப்பழ அளவு
மிளகாய்தூள்     -50 கிராம்
வெந்தயத்தூள்     -ஒரு டீஸ்பூன்
எண்ணெய்                   -150 மில்லி,
உப்பு                    -தேவையான அளவு.
தாளிக்கத்        - தேவையான பொருட்கள்
வெந்தயம்                     -1 டீஸ்பூன்     
கடுகு                     -1 டீஸ்பூன்
பெருங்காயத்தூள்        -முக்கால் டீஸ்பூன்
காய்ந்த மிளகாய்         -2.
எப்படி செய்வது?

கத்தரிக்காயை கழுவி சுத்தம் செய்து நன்கு துடைத்து நீளவாக்கில் வெட்டிக்கொள்ளுங்கள்.  புளியைக் கெட்டியாகக் கரைத்து வடிகட்டி, அதில் உப்பு,  மஞ்சள்தூள், மிளகாய்தூள், வெந்தயத்தூள், சேர்த்து கத்தரிக்காயுடன் கொட்டிக் கிளறுங்கள் (கை படவே கூடாது). அப்படியே ஒரு இரவு ஊற  வையுங்கள். மறுநாள் காலையில் புளிக் கரைசலை மட்டும் வடிகட்டி எடுத்துவிட்டு, ஒருநாள் முழுவதும் வெயிலில் காயவையுங்கள். பிறகு, அதில்  100 மில்லி எண்ணெயைக் காய்ச்சி ஊற்றிக் கலக்குங்கள். கடாயில் சிறிதளவு எண்ணெய் விட்டு, சூடானதும் கடுகு, வெந்தயம், பெருங்காயம், காய்ந்த  மிளகாய் போட்டுத் தாளித்து, கத்தரிக்காய் கலவையில் கொட்டுங்கள். கத்தரிக்காய் ஊறுகாய் தயார். அவ்வப்போது வெயிலில் வைத்துப்  பயன்படுத்தினால் நீண்ட நாட்கள் ருசிக்கலாம்
« Last Edit: April 11, 2014, 11:14:13 PM by kanmani »