Author Topic: கீரை சூப்  (Read 398 times)

Offline kanmani

கீரை சூப்
« on: April 11, 2014, 11:08:44 PM »
என்னென்ன தேவை?

ஆய்ந்து நறுக்கி சுத்தம் செய்து பொடியாக நறுக்கிய பொன்னாங்கண்ணி கீரை - 1 கப்.

மசாலாவுக்கு...

லவங்கம் - 1,
பட்டை சிறிய துண்டு - 1,
பூண்டு - 2 பல்,
ஏலக்காய் - 1. (இந்த மசாலாவை சிறிய துணியில் மூட்டை கட்டவும்).
பச்சை மிளகாய் - 1,
தக்காளி - 1,
மிளகுத் தூள், உப்பு - தேவைக்கேற்ப,
சர்க்கரை - ஒரு சிட்டிகை,
சோள மாவு - 1/2 டீஸ்பூன்,
வெண்ணெய் - 1 டீஸ்பூன்.

எப்படிச் செய்வது? 

சிறிய குக்கரில் 2 கப் நீர், மசாலா கட்டிய மூட்டை, பச்சை மிளகாய், தக்காளி, நறுக்கிய கீரை இவற்றைச் சேர்த்து 2 விசில் வந்தவுடன் இறக்கவும். ஆறிய பின் மசாலா மூட்டையை நன்கு பிழிந்துவிட்டு எறிந்து விடவும். கீரைக் கலவையை மிக்ஸியில் அடித்துக் கூழாக்கிக் கொள்ளவும். மீண்டும் இதை அடுப்பில் வைத்து, லேசாக நுரைத்து வருகையில் சோள மாவைக் கரைத்து விடவும். 1/4 கப் தண்ர் சேர்த்து, ஒரு கொதி வரும்போது, சூப் கப்பில் நிரப்பி மேலே உப்பு, மிளகுத் தூள், சர்க்கரை தூவி வெண்ணெயை மிதக்க விடவும். அது லேசாக உருகி சூப்பின் சுவையை அதிகரிக்கச் செய்யும். விருப்பப்பட்டால் பேக்கரியில் கிடைக்கும் சூப் ஸ்டிக்கை வாங்கி ஸ்பூன் போல செருகி பறிமாறவும்.