என்னென்ன தேவை?
சுத்தம் செய்த முடக்கத்தான் கீரை - 1/2 கப்,
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்,
மிளகாய் - 6,
பெருங்காயம் - 1 சிறிய துண்டு,
புளி - எலுமிச்சை அளவு, எண்ணெய் - 1/2 டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கேற்ப.
எப்படிச் செய்வது?
புளி தவிர கீரை மற்றும் பிற பொருட்களை தனியே எண்ணெயில் வதக்கி எடுக்கவும். அதை புளியுடன் சேர்த்து அரைத்து வடித்து வைக்கவும்.
மூட்டுவலிகளுக்கு முடக்கத்தான் கீரை தலை சிறந்த நிவாரணி.