Author Topic: ~ 30 வகை ‘COOL’ ரெசிபி! ~  (Read 1957 times)

Offline MysteRy

Re: ~ 30 வகை ‘COOL’ ரெசிபி! ~
« Reply #15 on: April 11, 2014, 04:37:43 PM »
ஃப்ரூட் சாலட்



தேவையானவை:
ஆப்பிள், ஆரஞ்சு, சிறிய கிர்ணிப்பழம் - தலா ஒன்று, வாழைப்பழம் - 2, தர்பூசணித் துண்டுகள் - கால் கப், திராட்சை - 10, மாதுளை முத்துக்கள் - கால் கப், கண்டன்ஸ்டு மில்க், தேன் - தலா 2 டீஸ்பூன், சாட் மசாலா அல்லது சீரகத்தூள் - சிறிதளவு.

செய்முறை:
ஆப்பிள், கிர்ணிப்பழம், வாழைப்பழத்தை துண்டுக ளாக்கி பாத்திரத்தில் போடவும். தர்பூசணி துண்டுகளையும் போடவும். ஆரஞ்சை தோல், கொட்டை நீக்கி இதனுடன் சேர்த்து... திராட்சை, மாதுளை முத்துக்களையும் சேர்க்கவும். பிறகு கண்டன்ஸ்டு மில்க், தேன் சேர்த்துக் கலக்கவும். இதை குளிரவைத்து... சாட் மசாலா அல்லது சீரகத்தூள் தூவி பரிமாறவும்.

Offline MysteRy

Re: ~ 30 வகை ‘COOL’ ரெசிபி! ~
« Reply #16 on: April 11, 2014, 04:39:34 PM »
கிவி ஸ்மூத்தி



தேவையானவை:
கிவி பழம் (டிபார்ட்மென்ட் கடைகளில் கிடைக்கும்) - 2, கெட்டித் தயிர் - அரை கப், பால் - ஒரு கப், பொடித்த சர்க்கரை - 2 டேபிள்ஸ்பூன், துருவிய பாதாம் - ஒரு டேபிள்ஸ்பூன், ஐஸ்கட்டிகள் - 2.

செய்முறை:
கிவி பழத்தை, தோல் சீவி துண்டுகளாக நறுக்கவும். மிக்ஸி ஜாரில் கிவி பழம், தயிர், பால், பொடித்த சர்க்கரை, ஐஸ் கட்டிகள் போட்டு நன்கு அடிக்கவும். அதை கண்ணாடி டம்ளரில் ஊற்றி, பாதாம் துருவல் தூவி பரிமாறவும்.

குறிப்பு:
கிவி பழத்துக்குப் பதில் ஆப்பிள், வாழைப்பழம் முலாம்பழம், பப்பாளி சேர்த்தும் 'ஸ்மூத்தி’ செய்யலாம்.

Offline MysteRy

Re: ~ 30 வகை ‘COOL’ ரெசிபி! ~
« Reply #17 on: April 11, 2014, 04:41:01 PM »
பூசணி தயிர்ப்பச்சடி



தேவையானவை:
பூசணித் துருவல் - ஒரு கப், கெட்டித் தயிர் - அரை கப், பச்சை மிளகாய் - ஒன்று (பொடியாக நறுக் கவும்), இஞ்சித் துருவல் - ஒரு டீஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு - தலா கால் டீஸ்பூன், பெருங்காயத்தூள் - ஒரு சிட் டிகை, கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறி தளவு, எண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை:
பூசணித் துருவலில் இருந்து நீரைப் பிழியவும். ஒரு பாத்திரத்தில் தயிரை ஊற்றி, அதனுடன் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், பூசணித் துருவல், கறிவேப்பிலை, கொத்தமல்லி, இஞ்சித் துருவல், உப்பு சேர்த்துக் கலக் கவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி, கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள் தாளித்து அதனுடன் சேர்க்கவும்.
பூசணி, நாவறட்சியைப் போக்கும். உடம்பில் நீர்ச்சத்து குறையாமல் பாதுகாக்கும்.

Offline MysteRy

Re: ~ 30 வகை ‘COOL’ ரெசிபி! ~
« Reply #18 on: April 11, 2014, 04:42:22 PM »
மாம்பழ ஸ்ரீகண்ட்



தேவையானவை:
மாம்பழம் - ஒன்று, கெட்டித்தயிர் - ஒரு கப், பொடித்த சர்க்கரை - 2 டீஸ்பூன், ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், துருவிய பாதாம் - ஒரு டீஸ்பூன், பொடியாக நறுக்கிய மாம்பழத் துண்டுகள் - சிறிதளவு.

செய்முறை:
மாம்பழத்தை தோல் சீவி, கொட்டை நீக்கி, மிக்ஸி யில் அடித்துக்கொள்ளவும். தயிரை மஸ்லின் துணியில் கட்டி தொங்க விட்டு, நீரை வடிக்கவும். ஒரு பாத்திரத் தில் மாம்பழ விழுது, கெட்டியாக உள்ள தயிர், பொடித்த சர்க்கரை, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலக்கி, சிறிய கிண்ணங்களில் ஊற்றவும். மேலே பாதாம் துருவல், மாம்பழத் துண்டுகள் தூவி அலங்கரிக்கவும். குளிர வைத்து சாப்பிடக் கொடுக்கவும்.

Offline MysteRy

Re: ~ 30 வகை ‘COOL’ ரெசிபி! ~
« Reply #19 on: April 11, 2014, 04:43:41 PM »
கேரட் - பீட்ரூட் டிலைட்



தேவையானவை:
 பீட்ரூட், கேரட், தக்காளி - தலா ஒன்று, மிளகுத்தூள், சீரகத்தூள் - தலா கால் டீஸ்பூன், புதினா - சிறிதளவு, எலுமிச்சம்பழம் - ஒன்று, இளநீர் வழுக்கை - சிறிதளவு, உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை:
பீட்ரூட், கேரட், தக்காளியை மிக்ஸியில் அரைத்து வடிகட்டிக் கொள்ளவும். அதனுடன் உப்பு, மிளகுத்தூள், சீரகத்தூள், எலு மிச்சைச் சாறு சேர்த்துக் கலக்கவும். புதினாவை அரைத்து வடிகட்டி சேர்க்க வும். பொடியாக நறுக்கிய இளநீர் வழுக்கை சேர்த்துக் கலக்கிப் பரிமாற வும் (குளிரவைத்துக் கொடுத்தால்   சுவை இன்னும் தூக்கலாக இருக்கும்).

Offline MysteRy

Re: ~ 30 வகை ‘COOL’ ரெசிபி! ~
« Reply #20 on: April 11, 2014, 04:45:07 PM »
சம்மர் வெஜ் சாலட்



தேவையானவை:
மாங்காய், வெள்ளரிக்காய், தக்காளி, கேரட், முள்ளங்கி, வெங்காயம், பேரிக்காய் - தலா ஒன்று, முளைகட்டிய பச்சைப் பயறு - கால் கப், மாங்காய் இஞ்சித் துண்டுகள் - 2 டேபிள்ஸ்பூன், எலுமிச்சைச் சாறு - 2 டேபிள்ஸ்பூன், நறுக்கிய பசலைக்கீரை - கால் கப், நறுக்கிய முட்டைகோஸ் இலைகள் - சிறிதளவு, சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன், மிளகுத்தூள், உப்பு - தேவைக்கேற்ப,

செய்முறை:
காய்கறிகளைத் நறுக்கிக் கொள்ளவும். வெந்நீரில் பசலைக்கீரை மற்றும் முட்டைகோஸ் இலைகளை 5 நிமிடம் போட்டு எடுத்துக்கொள்ளவும். எல்லாவற்றை யும் பெரிய பாத்திரத்தில் போட்டு... மாங்காய் இஞ்சித் துண்டுகள், உப்பு, மிளகுத்தூள், சீரகத்தூள் சேர்க்கவும். பிறகு, எலுமிச்சைச் சாறு, முளைகட்டிய பயறு சேர்த்துக் கலக்கி பரிமாறவும்.

Offline MysteRy

Re: ~ 30 வகை ‘COOL’ ரெசிபி! ~
« Reply #21 on: April 11, 2014, 04:46:20 PM »
தர்பூசணி சட்னி



தேவையானவை:
 தர்பூசணித் தோலின் உள்ளே இருக்கும் வெண்மைப் பகுதி - அரை கப், தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய் - 3, பூண்டு - ஒரு பல், கறிவேப்பிலை - சிறிதளவு, கடுகு, உளுத்தம்பருப்பு - தலா கால் டீஸ்பூன், எண்ணெய் - 2 டீஸ்பூன், புளி, உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை:
வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு... கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தவிர மற்ற பொருட்களை வதக்கி, ஆறவிட்டு அரைக்கவும். மீதமுள்ள ஒரு டீஸ்பூன் எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு கறிவேப்பிலை தாளித்துச் சேர்க்கவும். சுவையான சட்னி ரெடி.
தர்பூசணியின் வெள்ளைப் பகுதி சத்துக்கள் நிறைந்தது.

Offline MysteRy

Re: ~ 30 வகை ‘COOL’ ரெசிபி! ~
« Reply #22 on: April 11, 2014, 04:47:39 PM »
ஜிகர்தண்டா



தேவையானவை:
பாதாம் பிசின் - ஒரு டீஸ்பூன், சுண்டக் காய்ச்சி, குளிர வைத்த பால் - ஒரு டம்ளர், கண்டன்ஸ்டு மில்க் - கால் கப், நன்னாரி அல்லது ரோஸ் சிரப் - 2 டீஸ்பூன், வெனிலா ஐஸ்கிரீம் - ஒரு கப்.

செய்முறை:
பாதாம் பிசினை 8 மணி நேரம் ஊறவிடவும். ஒரு டம்ளரில் பாதாம் பிசினைப் போட்டு, சுண்டக் காய்ச்சிய பால், நன்னாரி அல்லது ரோஸ் எசன்ஸ் சேர்த்துக் கலக்கவும். அதனுடன் கண்டன்ஸ்டு மில்க் சேர்க்கவும். மேலே வெனிலா ஐஸ்கிரீம் போட்டு சாப்பிடக் கொடுக்கவும்.
விருப்பப்பட்டால் துருவிய முந்திரி, பாதாமை மேலே சேர்க்கலாம். பாதாம் பிசின், குளிர்ச்சியைத் தரும்.

Offline MysteRy

Re: ~ 30 வகை ‘COOL’ ரெசிபி! ~
« Reply #23 on: April 11, 2014, 04:48:57 PM »
பழ கஸ்டர்டு



தேவையானவை:
பால் - 2 கப், கஸ்டர்டு பவுடர் (விருப்பமான சுவை) - 3 டேபிள்ஸ்பூன், சர்க்  கரை - 2 டீஸ்பூன், ஆப்பிள், திராட்சை, மாதுளை முத்துக்கள், ஆரஞ்சு சுளைகள் மற்றும் விருப்ப மான பழ வகைகள் - 2 கப், காய்ச்சி ஆறவைத்த பால் - 2 டீஸ்பூன் (கஸ்டர்டு பவுடரை இதில் கரைத்துக்கொள்ளவும்).

செய்முறை:
2 கப் பாலைக் காய்ச்சி... இதில் கஸ்டர்டு பவுடர் கரைசல், சர்க்கரை கலந்து கொதிக்க விடவும். நன்கு சேர்ந்து வரும்போது, அடுப்பை அணைத்து ஆறவிடவும். பிறகு நறுக்கிய பழத்துண்டுகளைப் போட்டுக் கலக்கி, குளிர வைக்கவும்.
விருப்பப்பட்டால், பரிமாறும் முன் தேன் ஊற்றிப் பரிமாறலாம்.

Offline MysteRy

Re: ~ 30 வகை ‘COOL’ ரெசிபி! ~
« Reply #24 on: April 11, 2014, 04:50:23 PM »
வெந்தயக்களி



தேவையானவை:
அரிசி மாவு - முக்கால் கப், வெந்தயத்தூள் - கால் கப், வெல்லம் அல்லது கருப்பட்டி - ஒன்றரை கப், நெய் - 3 டேபிள்ஸ்பூன்.

செய்முறை:
வெல்லம் அல்லது கருப்பட்டியை நீரில் கரைத்து, வடிகட்டிக் கொள்ளவும். அரிசி மாவு, வெந்தயத்தூள் இரண்டையும் கலந்து ஒன்றரை  கப் நீரில் கரைத்துக்கொள்ளவும். இதை அடுப்பில் வைத்து சூடாக்கி, கை விடாமல் கிளறவும். மாவு வெந்ததும், வெல்லக் கரைசலைச் சேர்த்துக் கிளறவும். பிறகு நெய் ஊற்றி, மேலும் கிளறி, மாவு ஒட்டாமல் வரும்போது இறக்கிப் பரிமாறவும்.
சூட்டைத் தணிக்கும் அருமையான களி இது.

Offline MysteRy

Re: ~ 30 வகை ‘COOL’ ரெசிபி! ~
« Reply #25 on: April 11, 2014, 04:51:33 PM »
பனானா -பனீர் லஸ்ஸி



தேவையானவை:
வாழைப்பழம் - ஒன்று, பனீர் துருவல் - கால் கப், ஜவ்வரிசி - 3 டேபிள்ஸ்பூன், தயிர் - ஒரு கப், சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன், ஜவ்வரிசி தூள் - ஒரு டேபிள்ஸ்பூன்,  சர்க்கரை - ஒரு டீஸ்பூன், புதினா - சிறிதளவு, ஐஸ்கட்டிகள் - 2, உப்பு - ஒரு சிட்டிகை.

செய்முறை:
ஜவ்வரிசியை வேகவைத்துக் கொள்ளவும். மிக்ஸி ஜாரில் ஐஸ் கட்டிகள், தயிர், உப்பு, சீரகத்தூள், பனீர் துருவல், வேகவைத்த ஜவ்வரிசி சேர்த்து அடிக்கவும். இதனுடன் சிறிது தண்ணீர், ஜவ்வரிசி தூள், வாழைப்பழ துண்டுகள், சர்க்கரை சேர்த்து மீண்டும் அடிக்கவும். இதை டம்ளரில் ஊற்றி, புதினா இலைகளால் அலங்கரித்துப் பரிமாறவும்.

Offline MysteRy

Re: ~ 30 வகை ‘COOL’ ரெசிபி! ~
« Reply #26 on: April 11, 2014, 04:52:52 PM »
ஃபலூடா



தேவையானவை:
வேகவைத்த சேமியா - அரை கப், சுண்டக் காய்ச்சிய பால் - ஒரு கப், சப்ஜா விதை (டிபார்ட்மென்ட் கடைகள், நாட்டுமருந்து கடைகளில் கிடைக்கும்) - ஒரு டீஸ்பூன், பழத்துண்டுகள் - அரை கப் (ஆப்பிள், வாழைப்பழம், பைனாப்பிள்) ரோஸ் சிரப் - ஒரு டீஸ்பூன், கண்டன்ஸ்டு மில்க் - கால் கப்.

செய்முறை:
சுண்டக் காய்ச்சிய பாலை குளிர வைக்கவும். சப்ஜா விதையை 6-8 மணி நேரம் ஊறவைக்க வும். வேக வைத்த சேமியாவை ஆற விடவும். ஒரு உயரமான டம்ளரில் சப்ஜா விதையை முதலில் போடவும். பிறகு பாதி பால், ரோஸ் சிரப் சேர்த்துக் கலக்க வும். அதன் மேல் கண்டன்ஸ்டு மில்க் சேர்த்துக் கலக்கவும். பிறகு, வேக வைத்த சேமியா, மீதி பால், பழத்துண்டு கள் சேர்த்து, குளிர வைக்கவும். சாப்பிடும் போது ஸ்பூனால் எடுத்து சாப்பிடவும்.
ஃபலூடாவின் முக்கிய பொருளான சப்ஜா விதை, குளிர்ச்சி தரும்.

Offline MysteRy

Re: ~ 30 வகை ‘COOL’ ரெசிபி! ~
« Reply #27 on: April 11, 2014, 04:55:17 PM »
ஆம் பன்னா



தேவையானவை:
மாங்காய் - ஒன்று, புதினா இலைகள் - ஒரு கைப்பிடி அளவு, சீரகத்தூள் - 2 டீஸ்பூன், சர்க்கரை - ஒரு டீஸ்பூன், ஐஸ் கட்டிகள் - 2-4, கறுப்பு உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை:
மாங்காயைத் தோல் சீவி, கொட்டை நீக்கி, வேகவைத்து அரைத்துக்கொள்ளவும். மிக்ஸி ஜாரில் மாங்காய் விழுது, சீரகத்தூள், கறுப்பு உப்பு, சர்க்கரை, புதினா இலைகள் சேர்த்து அரைக்கவும். 2-3 டம்ளர் நீர், ஐஸ்கட்டிகள் சேர்த்துக் கலக்கவும். 'ஜில்’லென்று அருந்தவும்.

குறிப்பு:
வெயிலில் செல்லும் முன் இதனை ஒரு டம்ளர் குடித்துவிட்டு சென்றால், கடுங்கோடையில் ஏற்படும் 'சன் ஸ்ட்ரோக்’ எனப்படும் பாதிப்பிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம்.

Offline MysteRy

Re: ~ 30 வகை ‘COOL’ ரெசிபி! ~
« Reply #28 on: April 11, 2014, 04:57:13 PM »
தர்பூசணி கீர்



தேவையானவை:
அரிசி - அரை கப், தர்பூசணி சாறு - 3 கப், ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன், நெய் - 2 டீஸ்பூன், பால் - கால் கப், சர்க்கரை - 2 டீஸ்பூன், முந்திரி - சிறிதளவு.

செய்முறை:
அரிசியை ஒரு மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு, அதை தர்பூசணி சாற்றில் வேகவிடவும் (அடுப்பை மிதமான தீயில் வைக்கவும்). நன்கு வெந்ததும் சர்க்கரை, பால், ஏலக்காய்த்தூள் சேர்க்கவும். நெய்யில் வறுத்த முந்திரி சேர்த்துக் கலக்கி... சூடாகவோ அல்லது குளிரவைத்தோ பரிமாறவும்.

Offline MysteRy

Re: ~ 30 வகை ‘COOL’ ரெசிபி! ~
« Reply #29 on: April 11, 2014, 04:58:29 PM »
கிர்ணிப்பழ லஸ்ஸி



தேவையானவை:
கிர்ணிபழத் துண்டுகள் - ஒரு கப், தயிர் - அரை கப், பொடித்த சர்க்கரை - 2 டேபிள்ஸ்பூன், ஐஸ்கட்டிகள் - 2.

செய்முறை:
மிக்ஸி ஜாரில் கிர்ணிப்பழத் துண்டுகள், தயிர், பொடித்த சர்க் கரை, ஐஸ்கட்டிகள் போட்டு நன்கு நுரை வரும் வரை அடிக்கவும். பிறகு, கண்ணாடி டம்ளரில் ஊற்றி பரி மாறவும்.