Author Topic: இது தான் காதலா  (Read 484 times)

Offline thamilan

இது தான் காதலா
« on: April 10, 2014, 11:32:17 PM »
அவள்
என்னை கடக்கும் போதெல்லாம்
மனதுகுள் மகிழம்பூவின் மனம்
என்னை பார்க்கும் போதெல்லாம்
மனதுக்குள் குற்றாலத்து சாரல்
கண் சிமிட்டும் போதெல்லாம்
மனதுக்குள் ஆயிரம்
மின்மினிப் பூச்சிககளின் படபடப்பு

ஏன் என்று புரியவில்லை
கடைசியில் காற்று வந்து
காதுக்குள் எச்சரித்துவிட்டுப் போனது
காதல் வரப்போகிறது
கவனமாக இரு என்று


Offline NasRiYa

Re: இது தான் காதலா
« Reply #1 on: April 11, 2014, 11:08:48 AM »
ஏன் என்று புரியவில்லை
கடைசியில் காற்று வந்து
காதுக்குள் எச்சரித்துவிட்டுப் போனது
காதல் வரப்போகிறது
கவனமாக இரு என்று--->தமிழன் நல்ல  வரிகள் அருமையான படைப்பு
உங்களுக்கு ஒரு பாடல்


அம்மாடி இது தான் காதலா
அட ராமா இது என்ன வேதமா
நெஞ்சுக்குள்ளே ஏதோ ராகம் கேட்குது
கண்ணு ரெண்டும் தான தாளம் போடுது
கொட்டுங்க கொட்டுங்க கும்மிய கொட்டுங்க
நேரம் நல்ல நேரம்