« on: April 10, 2014, 09:17:19 PM »
தேங்காய் சாதம்

தேவையானவை:
தேங்காய் - அரை மூடி, அரிசி - ஒரு டம்ளர், கடலைப்பருப்பு - ஒரு கைப்பிடி அளவு, வேர்க்கடலை - ஒரு கைப்பிடி அளவு, கடுகு - ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 4, கறிவேப்பிலை - 2 ஆர்க்கு, பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், தேங்காய் எண்ணெய் - ஒரு குழிக்கரண்டி, உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
அரிசியை நான்கரை டம்ளர் தண்ணீர் ஊற்றி, உப்பு போட்டு வேக வைத்து, வடித்து வைத்துக் கொள்ளுங்கள். பிறகு, வாணலியில் தேங்காய் எண்ணெய் ஊற்றி... கடுகு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் தாளித்து, வேர்க்கடலை, கடலைப்பருப்பு, துருவிய தேங்காய் சேர்த்து சிவக்க வறுக்கவும். இந்தக் கலவையை சாதத்தில் சேர்த்துக் கலக்கவும்.
« Last Edit: April 10, 2014, 09:21:43 PM by MysteRy »

Logged