Author Topic: ~ ஸ்பைசி வெஜ் ஊத்தப்பம் ~  (Read 438 times)

Offline MysteRy

ஸ்பைசி வெஜ் ஊத்தப்பம்



தேவையானவை:
ஓட்ஸ் - 2 கப், கடலை மாவு - 2 டேபிள்ஸ்பூன், கெட்டித் தயிர் - அரை கப், ஆச்சி மோர் குழம்பு மசாலா - 2 டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
மேலாக தூவ காய்கறி கலவை: வெங்காயத்தாள் - ஒன்று (பொடியாக நறுக்கவும்), பொடி யாக நறுக்கிய குடமிளகாய் - ஒரு டேபிள்ஸ்பூன், துருவிய கேரட் - ஒரு டேபிள்ஸ்பூன், பொடியாக நறுக்கிய தக்காளி - 2 டேபிள்ஸ்பூன், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - 4 டேபிள்ஸ்பூன்.

செய்முறை:
ஓட்ஸை மிக்ஸியில் போட்டு பொடித்துக்கொள்ளவும். தயிரைக் கடைந்து, கெட்டி மோர் செய்து... அதில் ஆச்சி மோர் குழம்பு மசாலா, ஓட்ஸ் மாவு, கடலை மாவு, தேவையான உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து, ஊத்தப்பம் மாவு பதத்தில் கலந்துகொள்ளவும். காய்கறிகள், நறுக்கிய கொத்தமல்லி சேர்த்துக் கலந்து தனியே வைத்துக்கொள்ளவும்.
'நான்-ஸ்டிக் பான்’-ல் எண்ணெய் தடவி, ஒரு கரண்டி ஓட்ஸ் மாவு கலவையை எடுத்து ஊத்தப்பமாக ஊற்றவும். சுற்றிலும் கொஞ்சம் எண்ணெய் விட்டு, மேலாக காய்கறி கலவையைத் தூவி, சற்று அழுத்திவிட்டு, பின்னர் திருப்பவும். மறுபக்கம் சிவந்ததும் எடுத்து, சூடாக சட்னியுடன் பரிமாறவும்.