என்னென்ன தேவை?
மைதா மாவு - 2 கப்,
வறுத்த உளுத்தம் பருப்பு மாவு - 1 டேபிள்ஸ்பூன்,
வறுத்த வேர்க்கடலை மாவு - 1 டேபிள்ஸ்பூன்,
உடைத்தக் கடலை மாவு - 1 டேபிள்ஸ்பூன்.
வெண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்,
உப்பு - தேவைக்கேற்ப, சீரகம், மிளகு (கரகரப்பாகப் பொடித்தது) - 2 டீஸ்பூன்,
பெருங்காயம் - 1 சிட்டிகை,
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு.
எப்படிச் செய்வது?
மைதாவை வறுக்கவும். இட்லி பாத்திரத்தில் தண்ணீர் கொதிக்க விட்டு, ஒரு சுத்தமான துணியில் மைதாவை மூட்டையாகக் கட்டி ஆவியில் வேக வைத்து எடுத்து ஆறவிடவும். எண்ணெயைத் தவிர மற்ற எல்லாப் பொருட்களையும் மைதாவுடன் சிறிது தண்ணீர் தெளித்துப் பிசையவும். சீடை மாவு பதம் வந்ததும், சிறு கோலிகளாக உருட்டி ஒரு சுத்தமான துணியின் மேல் போட்டு மூடி வைத்து, ஒரு குச்சியில் 1-2 இடத்தில் சீடையின் மேல் குத்தி சூடான எண்ணெயில் கொஞ்சம் கொஞ்சமாகப் பொரித்து எடுக்கவும். ஆறியதும் எண்ணெயை வடித்து டப்பாவில் போட்டு மூடி வைக்கவும். இந்த மைதா சீடை கரகரப்பாக இருக்கும். வேர்க்கடலையின் மணமும் இருக்கும்.
சிலர் வெடிக்கும் என்று அரிசி மாவு சீடை செய்ய பயப்படுவார்கள். அரிசி மாவில் செய்கிறவர்கள் மாவை 2, 3 முறை சலிக்க வேண்டும்.