Author Topic: பிரிஞ்சி  (Read 424 times)

Offline kanmani

பிரிஞ்சி
« on: April 07, 2014, 11:07:03 AM »
என்னென்ன தேவை?

பாஸ்மதி அரிசி - 2 கப்,
உப்பு - தேவையான அளவு,
எண்ணெய் அல்லது நெய் - 2 டேபிள்ஸ்பூன்,
ஏலக்காய் - 4,
பட்டை - 4,
கிராம்பு - 4,
பிரிஞ்சி இலை - 4,
சோம்பு - சிறிது,
பட்டாணி, கேரட், பீன்ஸ், காலிஃபிளவர் - எல்லாம் சேர்த்து 2 கப் (வேக வைத்தது),
வெங்காயம் - 2, இஞ்சி,
பூண்டு விழுது - 2 டேபிள்ஸ்பூன்,
கரம் மசாலா - 2 டீஸ்பூன்,
தனியா தூள் - 2 டீஸ்பூன்.
எப்படிச் செய்வது?

அடுப்பில் கடாயை வைத்து நெய் ஊற்றிக் காய்ந்ததும் ஏலக்காய், பட்டை, கிராம்பு, பிரிஞ்சி இலை, சோம்பு போட்டு ஊறவைத்த அரிசியையும் போட்டு  வறுத்து உப்பு போட்டு வேக வைக்கவும். மற்றொரு கடாயில் வெங்காயம், இஞ்சி பூண்டு விழுதை வதக்கி, வேக வைத்த காய்கறிகளைப் போட்டு,  மசாலா தூள்களையும் போட்டு சாதம் வெந்தவுடன் சேர்த்துக் கலக்கி மூடி வேக வைக்கவும். பரிமாறும் முன் உருக்கிய நெய் சேர்த்துப் பரிமாறவும்.