Author Topic: ~ தயிர் மருத்துவம் ~  (Read 445 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 227456
  • Total likes: 29058
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
~ தயிர் மருத்துவம் ~
« on: March 31, 2014, 01:56:20 PM »
தயிர் மருத்துவம்




பாலை விடத் தயிர் அதனை விட மோரும் உடலுக்கு நம்மை பயப்பவை. தயிரோ, மோரோ இன்றி நம் உணவைப் பூர்த்தி செய்வது நல்லதல்ல.

தயிரின் மருத்துவக்குணம் பசியைத் தூண்டும், உடலுக்கு குளிர்ச்சி தரும், குமட்டல் வாந்தி நிற்கும், அஜீரணம் போக்கும்.

பேதியைக் கட்டுப்படுத்தும், மஞ்சட்காமாலையைக் கட்டுப்படுத்தும். தயிரில் சுண்ணாம்புச் சத்தும் வைட்டமின் சி யும் உள்ளன. எனவே இச்சத்துப் பற்றாக்குறையால் ஏற்படும் அனைத்துக் கோளாறுகளுக்கும் தயிர் நல்லது.

சருமம் பளபளக்கவும், சூரிய வெப்பத்தினால் பாதிக்கப்படாமல் இருக்கவும் தயிர் அல்லது மோரை உடலில் பூசி குளித்தால் சருமம் பளபளப்பாகும். தலைமுடி மிருதுவாக, நீளமாக, ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது. முகப்பருக்களை ஒழிக்க வேண்டுமா? தயிரில் சிறிதளவு கடலைமாவு கலந்து அரைமணி நேரம் ஊறிய பிறகு முகத்தைக் கழுவுங்கள் இதனை தினமும் செய்தால் பருக்கள் மறையும். கால்கள் சோர்ந்து விட்டால் தயிருடன் வினிகர் கலந்து கால் மீது தடவினால் புத்துணர்ச்சி கிடைக்கும்.