Author Topic: ~ 30 வகை பொடிகள்! ~  (Read 1624 times)

Offline MysteRy

Re: ~ 30 வகை பொடிகள்! ~
« Reply #15 on: March 28, 2014, 10:11:22 AM »
சாம்பார்பொடி



தேவையானவை:
காய்ந்த மிளகாய் - 250 கிராம், தனியா - 500 கிராம், துவரம்பருப்பு - 200 கிராம், கடலைப் பருப்பு - 100 கிராம், வெந்தயம், மிளகு - தலா 50 கிராம், மஞ்சள் - 2.

செய்முறை:
வாணலியில் எண்ணெய் விடாமல் காய்ந்த மிளகாய், தனியா, மிளகு, துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, வெந்தயம், மஞ்சள் ஆகியவற்றை லேசாக வறுத்து (தனித்தனியாக வறுக்கவும்), மெஷினில் கொடுத்து அரைக்கவும் .

குறிப்பு:
வெயிலில் காயவைத்து அரைப்பதைவிட வறுத்து அரைத்தால், சாம்பார் பொடி வாசனையாக இருப் பதுடன், நீண்ட நாள் கெடாது.

Offline MysteRy

Re: ~ 30 வகை பொடிகள்! ~
« Reply #16 on: March 28, 2014, 10:13:03 AM »
நெல்லிக்காய் பொடி



தேவையானவை:
பெரிய நெல்லிக்காய் - 10, உளுத்தம்பருப்பு - 100 கிராம், காய்ந்த மிளகாய் - 2, உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
நெல்லிக்காயை கேரட் துருவியில் துருவி வெயிலில் காயவைத்து, வெறும் வாணலியில் வறுக்கவும். உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாயை தனியாக வறுக்கவும். எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து, இவற்றுடன் உப்பு சேர்த்து, மிக்ஸியில் பொடிக்கவும்.
நெல்லிக்காய்... வைட்டமின் 'சி’, இரும்புச்சத்து மிக்கது.

Offline MysteRy

Re: ~ 30 வகை பொடிகள்! ~
« Reply #17 on: March 28, 2014, 10:16:16 AM »
கொத்தமல்லிப் பொடி



தேவையானவை:
பச்சை கொத்தமல்லி - ஒரு கட்டு, உளுத்தம்பருப்பு - 100 கிராம், காய்ந்த மிளகாய் - 4, புளி - பெரிய நெல்லிக் காய் அளவு, உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
வெறும் வாணலியில் எண்ணெய் விடாமல் உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாயை  வறுத்துக் கொள்ளவும். புளியை தனியாக வறுக்கவும் (நன்கு உலர்ந்துவிடும் வரை). கொத்தமல்லியை ஆய்ந்து, கழுவி, ஒரு துணியில் பரவலாகப் போட்டு உலரவிடவும். வறுத்த உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், புளியை மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று சுற்றி, உப்பு சேர்த்து, கொத்தமல்லியை கொஞ்சம் கொஞ்சமாகப் போட்டு பொடிக்கவும்.

குறிப்பு:
இது தயிர் சாதத்துக்கு சிறந்த காம்பினேஷன். கொத்தமல்லி இல்லாத நாட்களில், அதற்குப் பதிலாக இந்தப் பொடியை குழம்பில் சிறிதளவு
சேர்க்கலாம்.

Offline MysteRy

Re: ~ 30 வகை பொடிகள்! ~
« Reply #18 on: March 28, 2014, 10:22:51 AM »
மூலிகைப்பொடி



தேவையானவை:
வல்லாரை இலை, முடக்கத்தான் இலை, துளசி இலை,  தூதுவளை இலை, புதினா - தலா ஒரு கைப்பிடி அளவு, சுக்கு - ஒரு துண்டு, உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
இலைகளைத் தனித்தனியாக கழுவி, துணியில் பரவலாக போட்டு, நன்கு உலர்ந்ததும் வெறும் வாணலியில் தனித்தனியாக வறுக்கவும். வறுத்தவை எல்லாவற்றையும் ஒன்றுசேர்த்து, சுக்கை நசுக்கிப் போட்டு, உப்பு சேர்த்து மிக்ஸியில் பொடிக்கவும்.

குறிப்பு:
வல்லாரை ஞாபக சக்தி தரும். முடக்கத்தான் கீரை மூட்டுவலிக்கு சிறந்த மருந்து. துளசி - தூதுவளை தொண்டைக்கட்டு, சளி, இருமல் வராமல் தடுக்கும் சக்தி உடை யவை. புதினா வாய் துர்நாற்றத்தை போக்கும் தன்மை கொண்டது. சுக்கு வாயுத்தொல்லையை நீக்கும். இத்தனை பயனும் உள்ள இந்த மூலிகைப்பொடி உடல் ஆரோக்கியத்துக்கு சிறந்த துணைவன்.

Offline MysteRy

Re: ~ 30 வகை பொடிகள்! ~
« Reply #19 on: March 28, 2014, 10:29:07 AM »
சுண்டைக்காய்பொடி



தேவையானவை:
சுண்டைக்காய் வற்றல் - 100 கிராம், உளுத்தம்பருப்பு - ஒரு கப், காய்ந்த மிளகாய் - 4, பெருங்காயத்தூள் - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
வெறும் வாணலியில் சுண்டைக்காய் வற்றல், உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாயை தனித்தனியாக வறுக்கவும். பிறகு இவற்றுடன் தேவையான உப்பு, சிறிதளவு பெருங்காயத்தூள் சேர்த்து மிக்ஸியில் பொடித்துக்கொள்ளவும்.

குறிப்பு:
சுண்டைக்காய் வற்றல் வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்தும். சூடான சாதத்தில் இந்தப் பொடியை சிறிதளவு சேர்த்து, நெய் விட்டு பிசைந்து சாப்பிடலாம்.

Offline MysteRy

Re: ~ 30 வகை பொடிகள்! ~
« Reply #20 on: March 28, 2014, 10:32:08 AM »
ஓமப்பொடி



தேவையானவை:
ஓமம் - 100 கிராம், மிளகு - 10, சீரகம் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
வெறும் வாணலியில் ஓமம், மிளகு, சீரகம் ஆகியவற்றை தனித்தனியாக வறுக்கவும். பிறகு அவற்றுடன் உப்பு சேர்த்து மிக்ஸியில் பொடிக்கவும்.

குறிப்பு:
இந்தப் பொடியை சூடான சாதத்தில் போட்டு, நெய் விட்டு பிசைந்து சாப்பிடலாம். மோருடன் இதை சிறிதளவு சேர்த்து அருந்தினால், ஜீரண சக்தி அதிகரிக்கும். இந்தப் பொடி கைவசம் இருந்தால் தோசை மாவுடன் கலந்து தோசை செய்தால் மிகவும் ருசியுடன் இருக்கும். சிறிதளவு வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய் நறுக்கிப் போட்டு தயாரித்தால் சுவையில் அசத்தும்.

Offline MysteRy

Re: ~ 30 வகை பொடிகள்! ~
« Reply #21 on: March 28, 2014, 10:40:14 AM »
கொள்ளுப்பொடி



தேவையானவை:
கொள்ளு - 100 கிராம், காய்ந்த மிளகாய் - 6, உளுத்தம்பருப்பு - 100 கிராம், பெருங்காயத்தூள் - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
வெறும் வாணலியில் கொள்ளு, காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பை தனித்தனியாக எண்ணெய் விடாமல் வறுக்கவும். இவற்றுடன் தேவையான உப்பு, சிறிதளவு பெருங்காயத்தூள் சேர்த்துப் பொடித்துக்கொள்ளவும்.

குறிப்பு:
கொள்ளு, கொழுப்புச்சத்தைக் குறைக்கும்.

Offline MysteRy

Re: ~ 30 வகை பொடிகள்! ~
« Reply #22 on: March 28, 2014, 11:39:20 AM »
சட்னி பவுடர்



தேவையானவை:
கொப்பரைத் தேங்காய் துருவல் - 2 கப், காய்ந்த மிளகாய் - 4, பொட்டுக்கடலை - ஒரு கப், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
வெறும் வாணலியில் பொட்டுக்கடலை, கொப்பரைத் துருவல், காய்ந்த மிளகாயை வறுக்கவும். இவற்றுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து மிக்ஸியில் பொடிக்கவும்.

குறிப்பு:
 இந்தப் பொடியுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கலந்து... கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்தால்... உடனடி சட்னி தயார். சிறிதளவு தயிர் அல்லது எலுமிச்சைச் சாறு சேர்க்கலாம்.

Offline MysteRy

Re: ~ 30 வகை பொடிகள்! ~
« Reply #23 on: March 28, 2014, 12:03:10 PM »
கீரைப்பொடி



தேவையானவை:
கோங்கூரா (புளிச்சக்கீரை), கறிவேப்பிலை, புதினா - ஒரு கைப்பிடி அளவு, உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
கோங்கூரா (புளிச்சக்கீரை) இலை, கறிவேப் பிலை, புதினா ஆகியவற்றை சுத்தம் செய்து பொடிப் பொடியாக நறுக்கி, ஒரு துணியில் போட்டு, வெயிலில் உலர்த்தவும். பிறகு, இவற்றை வெறும் வாணலியில் லேசாக வறுக்கவும். இவற்றுடன் உப்பு சேர்த்துப் பொடிக்கவும்.

குறிப்பு:
உளுந்தை ஊறவைத்து அரைத்து, இந்தப் பொடியை சேர்த்து, எளிதாக கீரை வடை தயாரித்துவிடலாம். புளிச்சக்கீரை, இரும்புச்சத்து கொண்டது.

Offline MysteRy

Re: ~ 30 வகை பொடிகள்! ~
« Reply #24 on: March 28, 2014, 12:08:12 PM »
பாயச பவுடர்



தேவையானவை:
பிஸ்தா பருப்பு - 10, முந்திரிப் பருப்பு, பாதாம் பருப்பு - தலா 100 கிராம், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, சர்க்கரை, பால் - தேவையான அளவு.

செய்முறை:
பிஸ்தா பருப்பு, முந்திரிப் பருப்பு, பாதாம் பருப்பை லேசாக சூடாக்கி மிக்ஸியில் பொடித்து வைக்கவும்.
பாலைக் காய்ச்சி இந்த பவுடரை கொஞ்சம் சேர்த்து, ஏலக்காய்த் தூள், சர்க்கரை சேர்த்து ஒரு கொதிவிட்டு இறக்கினால்... திடீர் பாயசம் ரெடி. வாழைப்பழம், பலாக்சுளையை பொடியாக நறுக்கி சேர்த்தால், சுவை கூடும்.

Offline MysteRy

Re: ~ 30 வகை பொடிகள்! ~
« Reply #25 on: March 28, 2014, 12:11:28 PM »
தீபாவளி மருந்துப்பொடி



தேவையானவை:
 கண்டதிப்பிலி - 50 கிராம், சுக்கு - ஒரு துண்டு, ஓமம் - 50 கிராம், சீரகம் - 2 டீஸ்பூன், அரிசி திப்பிலி - 25 கிராம், வாயு விளங்கம் (நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்) - 25 கிராம், வால் மிளகு - 50 கிராம், மிளகு - 25 கிராம், சித்தரத்தை - ஒரு துண்டு.

செய்முறை:
கண்டதிப்பிலி, சுக்கு, ஓமம், சீரகம், அரிசி திப்பிலி, வாயு விளங்கம், மிளகு, வால் மிளகு, சித்தரத்தை எல்லாவற்றையும் நன்கு நசுக்கி, வெறும் வாணலியில் தனித்தனியாக வறுத்துப் பொடிக்கவும்.

குறிப்பு:
பட்சணங்கள் அதிகமாக சாப்பிடும் நேரங்களில், குறிப்பாக தீபாவளி சமயத்தில், வயிற்றுக் கோளாறு ஏற்படாமல் தடுக்கும் குணம் கொண்டது இந்தப் பொடி.
ஒரு பங்கு பொடிக்கு ஒரு பங்கு பொடித்த வெல்லம் சேர்த்து, லேசாக சூடாக்கிய நெய் - நல்லெண்ணெய் 4 டீஸ்பூன், சிறிதளவு தேன் சேர்த்துப் பிசைந்து... இந்தக் கலவையில் கொஞ்சம் எடுத்து, சிறிய நெல்லிக்காய் சைஸில் உருட்டி சாப்பிடலாம்.

Offline MysteRy

Re: ~ 30 வகை பொடிகள்! ~
« Reply #26 on: March 28, 2014, 12:14:26 PM »
அடைப்பொடி



தேவையானவை:
 இட்லி அரிசி - 250 கிராம், கடலைப்பருப்பு, துவரம்பருப்பு - தலா ஒரு கப், காய்ந்த மிளகாய் - 6.

செய்முறை:
இட்லி அரிசி, கடலைப்பருப்பு, துவரம்பருப்பு, காய்ந்த மிளகாயை ஒன்றுசேர்த்து ரவை பதத்துக்கு அரைத்து வைத்துக்கொள்ளவும்.

குறிப்பு:
தேவைப்படும்போது, இந்த மாவுடன் தண்ணீர், உப்பு சேர்த்துக் கரைத்து... வெங்காயம் நறுக்கிப் போட்டு அடை தயாரிக்கலாம்.

Offline MysteRy

Re: ~ 30 வகை பொடிகள்! ~
« Reply #27 on: March 28, 2014, 12:18:23 PM »
தனியாப்பொடி



தேவையானவை:
தனியா - ஒரு கப், உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 4, உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
வாணலியில் எண்ணெய் விடாமல் தனியா, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாயை தனித்தனியாக வறுக்கவும். இவற்றுடன் உப்பு சேர்த்து மிக்ஸியில் பொடிக்கவும்.
குறிப்பு: தனியாப்பொடி பித்தத்தை தணிக்கும். இதை சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம்.

Offline MysteRy

Re: ~ 30 வகை பொடிகள்! ~
« Reply #28 on: March 28, 2014, 12:25:30 PM »
பஜ்ஜி பவுடர்



தேவையானவை:
கடலைப்பருப்பு - 100 கிராம், அரிசி - 200 கிராம், காய்ந்த மிளகாய் - 6, சோள மாவு - 2 டீஸ்பூன், பெருங்காயத்தூள் - சிறிதளவு.

செய்முறை:
கடலைப்பருப்பு, அரிசி, காய்ந்த மிளகாயை மெஷினில் கொடுத்து நைஸாக அரைக்கவும் (மிக்ஸியிலும் அரைக்கலாம்). இதனுடன் சோள மாவு, பெருங்காயத்தூள் சேர்த்துக் கலந்து வைக்கவும்.

குறிப்பு:
தேவைப்படும்போது, இந்த மாவுடன் உப்பு, தண்ணீர் சேர்த்துக் கலந்து பஜ்ஜி மாவு பதத்தில் கரைத்து... விருப்பமான காய்களைத் தோய்த்து பஜ்ஜி தயாரிக்கலாம்.

Offline MysteRy

Re: ~ 30 வகை பொடிகள்! ~
« Reply #29 on: March 28, 2014, 12:30:06 PM »
வடை பவுடர்



தேவையானவை:
தோல் நீக்கிய உளுத்தம்பருப்பு - 250 கிராம், மிளகு - 20, காய்ந்த மிளகாய் - மூன்று, பெருங்காயத்தூள் - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
உளுத்தம்பருப்பு, மிளகு, காய்ந்த மிளகாயை மெஷினில் கொடுத்து நைஸாக அரைக்கவும் (மிக்ஸியிலும் அரைக்கலாம்). பிறகு இதனுடன் உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்துக் கலந்து வைக்கவும்.

குறிப்பு:
தேவைப்படும்போது, மாவுடன் தண்ணீர் கலந்து கெட்டியாகப் பிசையவும். கோஸ் துருவல், நறுக்கிய கீரை, வெங்காயம் என விருப்பமானதை சேர்த்து, பிசைந்து வடைகளாகத் தட்டி, எண்ணெயில் பொரித்தெடுக்கலாம்.