Author Topic: ~ காந்தியடிகள் பொன்மொழிகள்:- ~  (Read 630 times)

Online MysteRy

காந்தியடிகள் பொன்மொழிகள்:-



பெண்களால் அன்பைப் பிரிக்க முடியாது. பெருக்கத்தான் முடியும்.

கடமையை முன்னிட்டு செய்த செயலுக்கு வெகுமதியை எதிர்பார்க்கக் கூடாது.

தவறுகளை ஒப்புக் கொள்ள மறுப்பதை விட பெரிய அவமானம் எதுவுமில்லை.

தியாகம் செய்துவிட்டு வருந்துபவன் தியாகி அல்ல.

பாமர மக்களுக்குத் தேவையானது உணவு ஒன்று மட்டுமே.

மிருகங்களைப் போல் நடந்து கொள்கிறவன் சுதந்திர மனிதனாக இருக்க முடியாது.

கண் பார்வையற்றவன் குருடன் அல்ல. தன் குற்றம் குறையை உணராமல் எவன் இருக்கிறானோ அவனே சரியான குருடன்.

மற்றவர்களை கெட்டவர்கள் என்று சொல்வதன் மூலம் நாம் நல்லவர்களாகி விட முடியாது.

உழைப்பவர்களின் கையில்தான் உலகம் இருக்கிறது. பிறர் உழைப்பில் வாழ்பவன் ஒருநாளும் முன்னேற முடியாது.

சில அறங்களில் ஆண்களை விட பெண்கள் சிறந்தவர்களாக இருக்கின்றனர். அந்த அறங்களில் அஹிம்சையும் ஒன்று.