காலமும் காமனும்
கூட்டாய், கூட்டிக்கழித்து
கட்டம்கட்டி செய்திட்ட
கூட்டுத்திட்டம் தான்
என் நெஞ்சக்கூட்டின்
மஞ்சக்குருவி உனை
காணாதே எனை
நாட்கடத்தி வைத்திருப்பது ...
கண்டுவிட்டால்
நாம் கண்டுவிட்டால்
காலமுள்ள காலம் வரை
காதலுக்கு மணிமகுடம்
காலமல்லாது நீயென்றும்
காமத்திற்கு மணிமகுடம்
காமனல்லாது நானென்றும்
வரலாறு வரிந்து கட்டிக்கொண்டு
பதிந்து கொள்ளுமென்று ...
வாழ்வாங்கு வாழ்ந்து வந்தது
பாவம்,காலமுமென்று என்றோ
ஓர்முறை நின் பரிதாபத்திற்குள்ளானதால்
பாவம் பிழைத்துபோகட்டுமென
விட்டுக்கொடுத்துவிட்டேன்
காலத்திற்கும் காமனுக்கும்
அவரவர் பெயர் பெருமைகளை ......