Author Topic: முகநூலில் ஒரு குருந்தகவல்  (Read 625 times)

Offline thamilan

முகநூல்லில் நெடுநாளாய்
குருந்தகவல் போடாத பிங்க்கிக்கு
ஒரு பிராது

ஆடிக்கும் அமாவாசைக்கும்
ஒரு தரம் வருகிறாய் அரட்டை அரங்கத்துக்கு 
முகநூலில் உன்னையும் உனது லைக்கையும்
காணமுடிவதில்லை இப்போது

உலகத்தில் எத்தனனயோ இருக்கிறது
நாம் சரி செய்ய
எத்தனை நாள் தான்
தூங்கிக் கிடப்பாய் வெகுநேரம்

திரைப்படத்தில் ஒரு நடிகன்
மீசையை காணமல் தவித்ததை
காணவில்லை என்று சொல்கிறான் என்
சிரித்துக் கிடந்தோம்

உண்மையிலே இப்போது
எங்கள் ஏரிகளைக் காணவில்லை
குளங்களை வயல்களைக் காணவில்லை

உன்னிடம் சொல்லலாம் என்று
அரட்டை அரங்கம் வந்தால்
உன்னையும் காணவில்லை

இதோ பார்
இதற்கும் நீ விளையாட்டாய்
சிரித்துக் கொண்டிருந்தால் நமது
கடலும் மலைகளும் கூட
காணாமல் போய்விடும்

என்  மின்அஞ்சல் எல்லாம்
உன் உன் உள்பெட்டிக்குள் வருகிறதா
இல்லை ஸ்பேம் பகுதிக்கு செல்கின்றனவா
எனது செய்திகளை நீ படிக்கிறாயா

நான் சரியாகத் தான்
பேசுகிறேனா
நீயும் இல்லையென்றால்
புத்தி இன்னும் பேதலித்து விடும்

இரு இரு
கொஞ்சம் இரு

இப்போது
உனக்கு இந்த பிராதை
முக நூல் வழியே அனுப்புவது நானா
இல்லை வேறு எவராவது
போலி ஐ-டி யில் இருக்கும்
வேறு எவனா

Offline PiNkY

Oii Somali uthaipatharkul odividu :P
   Enayum mathichu pranthu kodtha en anbaana nanbanukku :P thnx