Author Topic: ~ அபூர்வ நீர் குமிழ் சிலந்தி [ Aqua Bell Spider ] பற்றிய தகவல்கள்:- ~  (Read 605 times)

Offline MysteRy

அபூர்வ நீர் குமிழ் சிலந்தி [ Aqua Bell Spider ] பற்றிய தகவல்கள்:-



சிலந்திகளில் பல வகைகளை நாம் கேள்விபட்டிருக்கிறோம் பார்த்திருக்கிறோம். தொன்னை மர சிலந்தி மற்ற வகையை காட்டிலும் பெரிதாக அதிக ரோமங்களுடன் இருக்கும். விச சிலந்திகளும் உண்டு.

புது வகை சிலந்திகள் பற்றி ஜெர்மன் மற்றும் ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் ஆராய்சி மேற்கொண்டனர்.

அதில் நீரில் வாழும் ஒரு வகை சிலந்தி அபூர்வமானது. இதை நீர் மணி குமிழ் சிலந்தி என்று குறிப்பிடுகின்றனர்.

சிலந்தி வாழ்வதற்கு ஆக்ஸிஜன் அவசியம், அப்படி இருக்கும் போது இந்த சிலந்தி எப்படி நீரினுள் இருக்கும் ?.

அது நீர் குமிழ் [பப்பிள்] போன்ற கூட்டை நீர் மேல் மட்டத்தில் உருவாக்கி அதனுள் இருந்து கொண்டு நீருக்கு கீழே சென்று வாழ்கிறது. முதற்கட்ட ஆய்வில் 20 அல்லது 40 நிமிடங்கள் நீரினுள் இருக்கும் என அனுமானித்தார்கள். ஆனால் இந்த நீர் குமிழானது மீனுக்கு எப்படி செவுள் உபயோகித்து ஆக்ஸிஜன் பெறுகிறதோ அதே போன்று செயல்படுவதாகவும் 24 மணி நேரங்களுக்கு அது நீருக்கு வெளியே வர வேண்டிய அவசியம் இல்லை எனவும் இறுதி கட்ட ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.