செந்தமிழுக்குதான் செம்மொழி சிறப்பை சென்றடைய செய்துட்டாரே செம்மொழி நாயகர்
இருந்தும் செந்தமிழையே செம்மை செய்வது செழுமையா?
என சென்னை தமிழ் தன்னையும் சான்றோர் சீராட்ட செய்வாயானு சோகமா சொன்னது .
சோ சென்னைதமிழை சோக்கு செய்றதுக்காண்டி சொம்மனாகாட்டியும் ஒரு சோதனை முயற்சி ..
பட்சிட்டு சோக்கா இர்ந்தா சோக்கு மாமுனு சொல்லு , சோமாறா இர்ந்தா சோமாறி , சோம்பேறினுலாம் சொல்லாம சோமாறு மாமுன்னு சொல்லணும் சர்தானா?
எயற்கை அய்கை பாக்க சொல்லோ - மன்சுல
ஓன் அய்கு கவித நெனிப்புவரும்
ஓன் நெனிப்பு மட்டும் இர்ந்துச்சுன்னா - அப்பாலிக்கா
கசக்கும், பாவக்காலேர்ந்தும் இனிப்புவரும்
எப்பயும் பூவு அல்லாம் பாக்க சொல்லோ - மன்சுல
ஓன் அய்கு மொவத்தை பாக்க ஆசைவரும்
ஓன் கொரலு ஒர்தபா கேட்டு பயகிபுட்டா - கோட்டான்
வாயிலேருந்து இருந்தும்கூட குயிலு ஓசைவரும்
ஓன்னை நெனிசுக்குன்னே ஊட்ல நாஷ்டா செஞ்சேன் - மையாலுமே
இட்டிலி சுட்டாக்கா தோசைவரும்
நான் இஷ்டபட்ராப்ள நீயும் இஷட்ப்பட்டு என்னை நேநிச்சி - இத்தை
பட்சாகா உனுக்கும் சோக்கா மெட்ராஸ் தமிளு பாசை(ஷை) வரும்