உன் வீட்டு தஞ்சாவூர்
பொம்மை மட்டும்
தலையை ஆட்டுவதற்கு
பதிலாக கண்ணடிக்கிறதே..!
அதற்கும்
உன் மேல் காதலா...!!
என் வானத்தில்
இரு சந்திரன்
ஒன்று மேலே
மற்றது என்னருகில்...!!
காற்றின் மேல்
எனக்கு தீரா கோபம்..!
ஐந்து அங்குல
இடைவெளியில்
நீ கொடுத்த முத்தத்தை
காற்று எனக்கு வேண்டும்
என்று கவர்ந்து சென்றது..!!
நீ
எனது
நடமாடும் உயிர்..!
ஒரு நாள்
உன்னுடன் பேசுகையில்
நகம் கடித்த போது..,
" நகத்தை கடிக்காதே..! " என்று
சட்., சட்.., என்று
விரலில் அடித்தாய்
அன்றிலிருந்து
இன்று வரை
நகம் கடிக்காமல்
பேசியதில்லை நான்...!!