Author Topic: ~ ராகி பனீர் ஒப்பட்டு ! ~  (Read 423 times)

Offline MysteRy

~ ராகி பனீர் ஒப்பட்டு ! ~
« on: March 13, 2014, 09:38:59 PM »
ராகி பனீர் ஒப்பட்டு !



தேவையானவை:
பனீர் துருவல், ராகி (கேழ்வரகு) மாவு - தலா 2 கப், பொடித்த கருப்பட்டி - 3 கப், தேங்காய் துருவல் - ஒரு கப், முந்திரி  (சீவியது) - கால் கப், ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன், நெய் - தேவையான அளவு,  எண்ணெய், உப்பு - சிறிதளவு.

செய்முறை:

ராகி மாவுடன் கொஞ்சம் உப்பு, எண்ணெய் சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு  தளர பிசைந்து  அப்படியே வைக்கவும். கருப்பட்டியை சுத்தம் செய்து, அதை பாகாக்கி கொள்ளவும். அதனுடன் பனீர் துருவல் சேர்த்துக் கிளறவும். கெட்டியாக வரும்போது... தேங்காய் துருவல், முந்திரி சேர்த்துக் கிளறவும். கடைசியில் ஏலக்காய்த்தூள், நெய், சேர்த்து நன்கு கிளறி எடுத்தால்... பூரணம் ரெடி.

பிசைந்து வைத்திருக்கும் ராகி மாவில் இருந்து கொஞ்சம் எடுத்து சின்ன கிண்ணமாக செய்து அதனுள் பூரணத்தை வைத்து மெல்லிய போளியாக வாழையிலையில் தட்டவும். தவாவில் சிறிது நெய் விட்டு போளியை போடவும். நன்றாக வெந்து சிவந்ததும், சுற்றிலும் நெய் விட்டு, திருப்பிப் போட்டு எடுக்க... சூப்பரான, சத்தான ராகி - பனீர் ஒப்பட்டு தயார்.