Author Topic: ~ டிப்ஸ்... டிப்ஸ்...! ~  (Read 967 times)

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 227446
  • Total likes: 29057
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
~ டிப்ஸ்... டிப்ஸ்...! ~
« on: February 23, 2014, 09:01:10 PM »
டிப்ஸ்... டிப்ஸ்...!



கடலை
மாவு பஜ்ஜி சிலருக்குப் பிடிக்காமல் போகலாம். அப்படிப்பட்டவர்கள், கோதுமை
மாவையும் அரிசி மாவையும் சம அளவு எடுத்து, அதில் தேவையான உப்பு,
பெருங்காயத்தூள், மிளகாய்த்தூள் சேர்த்துக் கலந்து பஜ்ஜி செய்தால்... அதிக
வித்தியாசம் இல்லாமலும், அதேசமயம்  சுவையாகவும் இருக்கும்.

குக்கரிலிருந்து
பாத்திரங்களை எடுத்த பின், அடியிலிருக்கும் சூடான நீரை வீணாக்க வேண்டாம்.
அதை வாய் அகலமான பாத்திரத்தில் கொட்டி, கொஞ்சம் சோப்பு பவுடரைப் போட்டு...
அதில் கைப்பிடித்துணிகள், பிசுக்கான கரண்டி, மத்து, தட்டு போன்றவற்றைத்
தேய்த்துக் கழுவினால், பொருட்கள் பிசுக்கு நீங்கி 'பளிச்’சென்று ஆகிவிடும்.

முருங்கைக்காய்களைத்
துண்டுகளாக்கிய பின் அப்படியே சாம்பாரில் போடாமல், நடுவே இரண்டாகக்
கீறிவிட்டு போட்டால் சுவை கூடுவதுடன், சீக்கிரம் வெந்தும்விடும்.
குறிப்பாக, முருங்கைக்காய்கள் முற்றியதாக இருந்தால் இப்படி கீறிவிட்டுப்
போடும்போது, சுவைத்து சாப்பிட ஏதுவாக இருக்கும்.

தேங்காய்
சாதம் செய்கிறீர்களா... முதலில் வெறும் வாணலியில் இரண்டு மூன்று டீஸ்பூன்
வெள்ளை எள்ளை சற்று சிவக்க (ஒரு நிமிடம்) வறுத்து, பொடித்து வைத்துக்
கொள்ளவும். சாதம் கலந்து முடித்ததும், கடைசியில் பொடித்து வைத்துள்ள எள்ளை
மேலே தூவிவிட்டால்... சுவை அருமையாக இருக்கும். புளியோதரை, கறிவேப்பிலை
சாதம், புதினா சாதம் போன்றவற்றைத் தயாரிக்கும்போதுகூட இப்படி எள்ளுப்பொடி
தூவலாம். தாளிக்கும் எண்ணெயையும் குறைத்துக் கொள்ளலாம்.