Author Topic: குரட்டை ஒலி  (Read 5806 times)

Offline Global Angel

குரட்டை ஒலி
« on: November 27, 2011, 04:29:27 AM »
குரட்டை ஒலி


ஜனார்த்தனத்திற்கு இரண்டாவது மனைவி பிரேமா, முதல்மனைவி இறந்த ஐந்தாவது வருடம் பிரேமாவை திருமணம் செய்துவைத்தார், ஜனார்தனத்தின் அம்மா சிவகாமி. பேத்தி கயல்விழியின் மீது கொள்ளை பிரியம் சிவகாமியம்மாவிற்கு, தாயை இரண்டாவது வயதில் இழந்த கயல்விழிக்கு பாட்டி சிவகாமியம்மாவின் அரவணைப்பு இதமானதாக இருந்தது, இரண்டாவது திருமணத்தை தவிர்த்துவந்த ஜனார்த்தனத்தை திருமணத்திற்கு சம்மதிக்க வைப்பது எளிதானதாக இல்லை, மறுமணம் செய்துகொண்டால் பெண்குழந்தை வாழ்க்கையை கண்ணீரில் கடத்த வேண்டியதாகிவிடும் என்று எல்லோருமே பயந்தனர், ஜனார்தனத்தின் தாய் ஓரளவிற்கு ஆரோக்கியமாக இருந்ததால் ஐந்து ஆண்டுகள் கயல்விழியை தாயில்லாத குறை தெரியாமல் வளர்த்துவிட்டார்.

பிரேமா ஜனார்தனத்தின் அக்காள் மகள், ஏறக்குறைய பதினைந்து வயது வித்தியாசம், வெளியிலிருந்து பெண் பார்த்து திருமணம் செய்தால் குழந்தை கயல்விழிக்கு பிரச்சினைகள் ஏற்ப்படும் என்று தனது சகோதரியின் பேத்தி பிரேமாவை ஜானார்தனத்திற்கு இரண்டாவது திருமணம் செய்தார் சிவகாமி. அப்போது கயல்விழி இரண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தாள், திருமணமாகிய புதிதில் கயல்விழியை பாசத்துடன் கவனித்து வந்தாள், ஜனார்தனத்துடன் அவரது அம்மா சிவகாமியும் இருந்ததால் கயல்விழிக்கும் பிரேமாவிற்குமான உறவில் பிரச்சினைகள் ஒன்றும் இல்லாமல் இருந்தது,

சிவகாமியம்மாவின் உடல்நிலை வயதாகிவிட்ட காரணத்தால் குன்றத் துவங்கி சிறிது காலத்தில் இயற்க்கை எய்திவிட்டார், அதன் பிறகு கயல்விழிக்கும் பிரேமாவிற்க்குமான உறவில் லேசாக பிரச்சினைகள் தலையெடுக்க ஆரம்பித்தது, ஜனார்த்தனத்திற்கு பெரும்பாலான பிரச்சினைகள் தெரிவிக்கப்படாமலேயே இருந்தது, ப்ளஸ் டூவை சிரமப்பட்டு முடிக்க வேண்டிய நிலை கயல்விழிக்கு ஏற்ப்பட்டது, கல்லூரி படிக்க ஆர்வமிருந்தும் அதை வீண் என்று சொல்லி தடுத்துவிட்டாள் பிரேமா, வீட்டில் சமையல் மற்ற எல்லா வேலைகளையும் கயல்விழியை செய்யச் சொல்லி தினமும் துன்புறுத்துவாள் பிரேமா, இரவில் கயல்விழியை படுக்கைக்கு போகவிடாமல் பிரேமாவின் கால்களை அமுக்கி விடச்சொல்லி துன்புறுத்துவாள்,

தினமும் இரவில் பிரேமாவின் கால்களை அமுக்கி விட்டுகொண்டிருக்கும்போது பிரேமா விடும் குரட்டை சத்தம் ஆரம்பித்தவுடன் மெதுவாக எழுந்து படுக்கைக்குச் செல்லாமல், கதைகள் கவிதைகள் எழுதுவாள், அவள் அப்பா ஜனார்தனத்திடம் சொல்லி பல புத்தகங்களை வாங்கி வரும்படி சொல்லுவாள் அவற்றை எடுத்து படித்து கொண்டிருப்பாள், ஆனால் பிரேமாவின் குரட்டை ஒலி நின்றுவிட்டால் உடனே விளக்கை அணைத்துவிட்டு படுத்துகொள்வாள். தான் எழுதும் சிறுகதைகளை தன் அப்பா ஜனார்தனத்திடம் கொடுத்து பத்திரிகைகளுக்கு அனுப்பிவைப்பாள். பல முறை அவை பத்திரிகைகளில் பிரசுரமாகி அவற்றை படித்து சந்தோஷமடைவாள்.

ஒரு பதிப்பகம் அவளது சிறுகதைகளை தொகுத்து வெளியிட உரிமை கேட்டிருந்தது, அப்படி வெளிவந்த தொகுப்பிற்கு கயல்விழி 'குரட்டை ஒலி' என்று பெயர் வைத்தாள். கடைசிவரையில் கயல்விழியின் திறமையைப் பற்றி பிரேமாவிற்கு தெரியாமலே மறைத்து வைத்திருந்தனர் ஜனார்தனமும் கயல்விழியும். நாளடைவில் குரட்டை ஒலி கேட்டுகொண்டிருந்தால் மட்டுமே கயல்விழியால் நிதானமாக எழுதவும் படிக்கவும் முடியும் என்கிற நிலை உருவாகியது. அவளது எல்லா கதைகளையும் படித்து ரசித்த ரசிகன் ஒருவன் பெண் கேட்டு வந்தான், வேற்று ஜாதி என்பதால் திருமணம் செய்து கொடுக்க இயலாது என்று பிரேமா திருப்பி அனுப்பி விட்டாள்.

தான் ஏதாவது ஒரு புரட்சி செய்ய வேண்டும் என்று தோன்றியது கயல்விழிக்கு, பத்துவயது நிரம்பிய ஒரு ஆண் குழந்தைக்கு அப்பாவை இரண்டாவது திருமணம் செய்துகொள்ளும்படி வற்புறுத்தினாள் பிரேமா, சுமார் பதினைந்து வயது வித்தியாசத்தில் கல்யாணராமனை இரண்டாம் தாரமாக திருமணம் செய்து வைத்தாள் பிரேமா. திருமணத்திற்குப் பின் கயல்விழி குழந்தை அருணுடன் படுத்துறங்குவாள்

அப்போது அருகில் உறங்கும் தன்கணவன் கல்யாணராமனின் குரட்டை பிரேமாவை நினைவுபடுத்துவதாக இருக்கும், கல்யாணராமனின் குரட்டை ஒலி சத்தத்தில் மீண்டும் கதைகள் படிக்கவும் கவிதை கதைகள் எழுதவும் துவங்கினாள் கயல்விழி.



                    

Offline RemO

Re: குரட்டை ஒலி
« Reply #1 on: November 27, 2011, 03:18:36 PM »
ha ha

kurattaiku ivalavu sakthiya :D