Author Topic: ~ 30 வகை மில்க் ரெசிபி! ~  (Read 2946 times)

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 227446
  • Total likes: 29057
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ 30 வகை மில்க் ரெசிபி! ~
« Reply #15 on: January 30, 2014, 04:53:43 PM »
சப்போட்டா மில்க்ஷேக்




தேவையானவை:
பால் - 500 மில்லி, சப்போட்டா (பெரியது) - 3, சர்க்கரை - 5 டீஸ்பூன்.

செய்முறை:
பாலை நன்கு காய்ச்சி, சர்க்கரையை சேர்க்கவும். சர்க்கரை கரைந்து ஒரு கொதி வந்ததும் இறக்கி, ஆறவிடவும். சப்போட்டா பழத்தின் மேல் தோல் மற்றும் உள்ளிருக்கும் விதையை நீக்கி... மிக்ஸியில் போட்டு 2 நிமிடம் ஓடவிடவும். ஒரு கிளாஸ் அளவு ஆறிய பால் விட்டு மூடி மீண்டும் மிக்ஸியை அரை நிமிடம் ஓடவிட்டு நிறுத்தவும். இந்தக் கலவையை, மீதமுள்ள பாலில் விட்டுக் கலக்கினால்... சப்போட்டா மில்க் ஷேக் தயார்.
இதை அப்படியே சாப்பிடலாம். ஃப்ரிட்ஜில் குளிர வைத்தும் சாப்பிடலாம்.

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 227446
  • Total likes: 29057
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ 30 வகை மில்க் ரெசிபி! ~
« Reply #16 on: January 30, 2014, 05:03:50 PM »
மசாலா பால்




தேவையானவை:
பால் - 500 மில்லி, சர்க்கரை - 50 கிராம், பாதாம், முந்திரி, பிஸ்தா - தலா 10, குங்குமப்பூ - 4 இதழ்கள், ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை.

செய்முறை:
பாதாம் பருப்பை வெந்நீரில் ஊறப் போட்டு, தோல் நீக்கவும். பாதாம், முந்திரி, பிஸ்தா... இவற்றை சிறிதளவு பால் விட்டு விழுதாக அரைத்துக் கொள்ளவும். பாலை சூடாக்கி, பொங்கி வந்ததும் அரைத்த விழுது, சர்க்கரை சேர்த்து 5 நிமிடம் கொதிக்கவிடவும். இதனுடன் ஏலக்காய்த்தூள், குங்குமப்பூ சேர்த்துக் கலந்து தீயை நிறுத்தி, ஒரு தட்டு போட்டு மூடி வைக்கவும். இந்த மசாலா பாலை மிதமான சூட்டுடன் பரிமாறலாம். நன்கு ஆற வைத்து,

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 227446
  • Total likes: 29057
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ 30 வகை மில்க் ரெசிபி! ~
« Reply #17 on: January 30, 2014, 05:51:43 PM »
ரஸமலாய்




தேவையானவை:
பால் - ஒரு லிட்டர், பனீர் - 100 கிராம், சர்க்கரை - முக்கால் கப், குங்குமப்பூ - 4 இதழ்கள், சீவிய பாதாம் - பிஸ்தா - 2 டீஸ்பூன், ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், மைதா - 2 டீஸ்பூன்.

செய்முறை:
பாலை பாத்திரத்தில் விட்டு பாதியாகும் வரை காய்ச்சி... அரை கப் சர்க்கரை சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கவும். பால் சூடாக இருக்கும்போதே ஏலக்காய்த்தூள், குங்குமப்பூ சேர்த்துக் கலக்கவும்.
பனீரை நன்கு உதிர்த்துக் கொள்ளவும். அதனுடன் மைதா கலந்து பிசைந்து,  சிறுசிறு உருண்டைகளாக செய்யவும்.
குக்கரில் ஒரு கப் அளவு தண்ணீர் விட்டு, கால் கப் அளவு சர்க்கரை போட்டு கரையவிடவும். சர்க்கரைத் தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும் உருட்டி வைத்த உருண்டைகளை மெதுவாக போடவும். குக்கரை மூடி, 2 விசில் வந்த பிறகு இறக்கவும். பிரெஷர் போனதும் உருண்டைகளை எடுத்து லேசாக அழுத்தினால் தண்ணீர் வடியும். இந்த உருண்டைகளை காய்ச்சி வைத்திருக்கும் பால் கலவையில் சேர்த்து, சீவிய பாதாம் - பிஸ்தாவை மேலாக தூவினால்... ரஸமலாய் தயார்.

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 227446
  • Total likes: 29057
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ 30 வகை மில்க் ரெசிபி! ~
« Reply #18 on: January 30, 2014, 05:53:34 PM »
வெனிலா ஐஸ்க்ரீம்




தேவையானவை:
பால் - ஒரு லிட்டர், வெனிலா எசன்ஸ் - அரை டீஸ்பூன், ஐஸ்க்ரீம் பவுடர் (அல்லது) சோள மாவு - 4 டீஸ்பூன், சர்க்கரை - 150 கிராம் (அல்லது விருப்பத்துக்கேற்ப).

செய்முறை:
பாலை சுடவைத்து, பொங்கி வரும்போது 100 மில்லி அளவு எடுத்து, ஆற வைத்து ஐஸ்க்ரீம் பவுடர் (அல்லது) சோள மாவு போட்டு கலக்கவும். அடுப்பை மிதமான தீயில் வைத்து மீதமுள்ள பால் பாதியளவு குறுகுமாறு நன்கு காய்ச்சி... சர்க்கரை சேர்த்துக் கலக்கவும். பிறகு ஐஸ்க்ரீம் பவுடர் - பால் கலவையை சேர்த்து, நன்கு கலக்கவும். ஒரு கொதி வந்ததும் தீயை நிறுத்திவிடவும். அப்படியே ஆறவிடவும். நன்கு ஆறியதும் மிக்ஸியில் போட்டு 10 நிமிடம் அடிக்கவும். அடித்த கலவையை அலுமினியம் பாத்திரத்தில் விட்டு, வெனிலா எசன்ஸ் கலந்து ஃப்ரீசரில் வைத்து குளிரவிடவும் (குளிர்சாதனப் பெட்டியில் உள்ள ஸ்விட்சை 'கூலிங் ஹை’யில் வைக்கவும்). 2 மணி நேரத்தில் கெட்டியாகிவிடும். பிறகு கப்பில் வைத்து, ஸ்பூன் போட்டு பரிமாறவும்.

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 227446
  • Total likes: 29057
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ 30 வகை மில்க் ரெசிபி! ~
« Reply #19 on: January 30, 2014, 05:55:06 PM »
பனாரஸ் அல்வா




தேவையானவை:
பால் - ஒரு கப், பூசணிக்காய் துண்டுகள் (தோல் நீக்கியது) - ஒரு கப், சர்க்கரை - 2 கப், நெய் - கால் கப், பாதாம் - முந்திரி துண்டுகள் - 2 டீஸ்பூன், சர்க்கரை இல்லாத கோவா - அரை கப்.

செய்முறை:
பூசணிக்காயில் பால் விட்டு, குக்கரில் வேக வைத்து, ஆறியதும் அரைத்து எடுக்கவும். அடிகனமான கடாயில் அரைத்த விழுது, சர்க்கரை சேர்த்துக் கிளறவும். சேர்ந்தாற்போல வரும் சமயம் கோவாவை உதிர்த்துப் போட்டுக் கிளறவும். இறுகி வரும்போது அடி பிடிக்காதவாறு நெய் விட்டுக் கிளறவும். அல்வா பதம் வந்ததும் கீழே இறக்கவும். கடாயில் கொஞ்சம் நெய் விட்டு... பாதாம், முந்திரி துண்டுகளை வறுத்து, அல்வாவில் சேர்த்துக் கலக்கவும்.

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 227446
  • Total likes: 29057
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ 30 வகை மில்க் ரெசிபி! ~
« Reply #20 on: January 30, 2014, 05:56:49 PM »
இளநீர் வழுக்கை  பால் பாயசம்




தேவையானவை:
இளம் தேங்காய் (இளநீர் வழுக்கை) துண்டுகள் -  ஒரு கப், பால் - 500 மில்லி, சர்க்கரை - கால் கப், நெய் - ஒரு டீஸ்பூன், முந்திரித் துண்டுகள் - 10.

செய்முறை:
இளம் தேங்காயை அரைத்து விழுதாக்கவும். பாலைக் காய்ச்சி... சர்க்கரையை சேர்க்கவும். சர்க்கரை கரைந்ததும் அரைத்த விழுதை சேர்த்துக் கலக்கி... ஒரு கொதி வந்ததும் தீயை நிறுத்திவிடவும். கடாயில் நெய் விட்டு, சூடானதும் முந்திரித் துண்டுகளை பொன்னிற மாக வறுத்து, பாயசத்தில் கலக்கவும்.
இளநீர் வழுக்கைக்குப் பதில் நுங்கு, மாம்பழம் சேர்த்தும் தயாரிக்கலாம்.

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 227446
  • Total likes: 29057
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ 30 வகை மில்க் ரெசிபி! ~
« Reply #21 on: January 30, 2014, 05:58:22 PM »
பால் போளி




தேவையானவை:
 பால் - ஒரு லிட்டர், மைதாவில் செய்த பூரி - 10, ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், குங்குமப்பூ - 4 இதழ், சர்க்கரை - அரை கப்.

செய்முறை:
பாலை அடுப்பில் வைத்து பாதியாகக் குறுகும் வரை காய்ச்சி... சர்க்கரை சேர்த்துக் கிளறவும். சர்க்கரை கரைந்து ஒரு கொதி வந்ததும் தீயை நிறுத்திவிடவும். ஏலக்காய்த்தூள், குங்குமப்பூ போட்டு கலந்து கொள்ளவும். உடனே மைதா பூரியை சூடான பாலில் போடவும். ஒரு நிமிடம் கழித்து மேலும், கீழும் கலந்துவிடவும். 10 நிமிடம் கழித்து பரிமாறவும்.

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 227446
  • Total likes: 29057
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ 30 வகை மில்க் ரெசிபி! ~
« Reply #22 on: January 30, 2014, 06:00:07 PM »
பனீர் மில்க் கீர்




தேவையானவை:
  பால் - இரண்டரை கப், பனீர் தூள் - ஒன்றரை கப், சர்க்கரை - கால் கப், சோள மாவு - ஒரு டேபிள்ஸ்பூன், பாதாம் துண்டுகள் - 4 டீஸ்பூன்.

செய்முறை:
சிறிதளவு பாலை காய்ச்சி ஆற வைத்து, இதனுடன் சோள மாவை சேர்த்துக் கரைத்துக் கொள்ளவும். மீதமுள்ள பாலைக் காய்ச்சி, அடுப்பை குறைவான தீயில் வைத்து, சோள மாவு கலவையை விட்டு இடைவிடாது கிளறவும். பால் பொங்கி வரும் நேரம் சர்க்கரை, பனீர் தூளை சேர்த்துக் கலக்கவும். 3 நிமிடத்துக்குப் பிறகு இறக்கவும். நன்கு ஆறியதும் ஃப்ரிட்ஜில் குளிர வைத்து, மேலே பாதாம் துண்டுகள் தூவி பரிமாறவும்.

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 227446
  • Total likes: 29057
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ 30 வகை மில்க் ரெசிபி! ~
« Reply #23 on: January 30, 2014, 06:02:08 PM »
பாஸந்தி




தேவையானவை:
பால் - ஒரு லிட்டர், சர்க்கரை - 150 கிராம், பாதாம் - முந்திரி துண்டுகள் - 2 டீஸ்பூன், சோள மாவு - 2 டீஸ்பூன், ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன்.

செய்முறை:
பாலை அடிகன மான பாத்திரத்தில் காய்ச்சவும். பால் குறுகி முக்கால் பாகமாக வந்ததும் சர்க்கரை சேர்த்துக் கலக்கி, கொதிக்கவிடவும். பால் பாதியாக குறுகியதும், சோள மாவை கொஞ்சம் தண்ணீர் விட்டு கரைத்து பால் கலவையில் விட்டு கலந்து கொள்ளவும். ஒரு கொதி வந்ததும் இறக்கவும். பால் பாத்திரத்தின் ஓரத்தில் படிந்துள்ள ஆடைகளையும் சேர்த்துக் கலக்கவும். இதனுடன் ஏலக்காய்தூள் சேர்த்துக் கலந்து... பாதாம் - முந்திரி துண்டுகள் தூவி, குளிர வைத்து பரிமாறவும்.

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 227446
  • Total likes: 29057
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ 30 வகை மில்க் ரெசிபி! ~
« Reply #24 on: January 30, 2014, 06:03:55 PM »
மில்க் கேக்




தேவையானவை:
பால் - ஒரு லிட்டர், எலுமிச்சைச் சாறு - 3 டீஸ்பூன், ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், வெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன், பிஸ்தா பருப்பு துண்டுகள் - 2 டேபிள்ஸ்பூன், சர்க்கரை - அரை கப்.

செய்முறை:
முதலில் பாலை காய்ச்சவும். 3-ல் இரண்டு பாகமாக குறுகியதும், எலுமிச்சைச் சாறு விட்டு கலக்கவும். பால் திரிந்து தண்ணீர் பிரிந்து வரும். தண்ணீரை வடிகட்டி எடுத்துவிடவும். இதுதான் பனீர். இந்த பனீரை கடாயில் போடவும். சர்க்கரை சேர்த்துக் கிளறவும். சேர்ந்து வரும்போது, வெண்ணெயைப் போட்டு அடிபிடிக்காது கிளறவும். கெட்டியாக வரும்போது ஏலக்காய்த்தூள், பிஸ்தா பருப்பு தூவிக் கலந்து, நெய் தடவிய தட்டில் பரவலாக போட்டு தட்டவும். ஆறியதும் துண்டுகள் போடவும்.

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 227446
  • Total likes: 29057
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ 30 வகை மில்க் ரெசிபி! ~
« Reply #25 on: January 30, 2014, 06:05:47 PM »
மில்க்  ஃப்ரூட்ஸ் வெற்றிலை தட்டு




தேவையானவை:
பால் - ஒரு லிட்டர், பாதாம் - 100 கிராம், சத்து மாவு - 4 டீஸ்பூன், சர்க்கரை - ஒன்றரை கப், மஞ்சள், பச்சை, கோகோ நிற ஃபுட் கலர் - சிறிதளவு, நெய் - 4 டீஸ்பூன்.

செய்முறை:
பாதாம் பருப்பை வெந்நீரில் ஊற வைத்து, தோல் நீக்கி அரைத்து எடுக்கவும். பாலைக் காய்ச்சவும். பாதியாகக் குறுகி வந்ததும் சர்க்கரை, பாதாம் விழுது சேர்த்து, சத்துமாவு தூவி கலக்கவும். இறுகி வரும் சமயம் அடிபிடிக்காதவாறு நெய் விட்டுக் கிளறவும். உருட்டும் பதம் வந்ததும் கீழே இறக்கி மூன்று பாகமாக பிரிக்கவும். ஒன்றில் மஞ்சள் கலர், மற்றொன்றில் பச்சை கலர்,  மூன்றாவதில் கோகோ கலர் சேர்த்துக் கலக்கவும் கையில் நெய் தடவிக் கொண்டு, கலவை மிதமான சூட்டில் இருக்கும்போது சிறிது எடுத்து உருட்டி மஞ்சள் கலரில் வாழைப்பழ வடிவம் கொடுக்கவும். 4 பழம் சேர்த்து ஓட்டவும் (சூட்டில் ஒட்டிக் கொள்ளும்). பச்சை கலரில் வெற்றிலை செய்யவும். கோகோ கலரில் பாக்கு வடிவம் கொடுக்கவும். நன்கு ஆறியதும் தட்டில் எடுத்து வைத்து அலங்கரிக்கவும்.

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 227446
  • Total likes: 29057
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ 30 வகை மில்க் ரெசிபி! ~
« Reply #26 on: January 30, 2014, 06:08:02 PM »
பால் கொழுக்கட்டை




தேவையானவை:
பால் - 750 மில்லி, பதப்படுத்திய பச்சரிசி மாவு (அரிசியை ஊற வைத்து, களைந்து, நிழலில் உலர்த்தி மெஷினில் கொடுத்து அரைத்த மாவு) - அரை கப், பொடித்த வெல்லம் - அரை கப், நெய் - ஒரு டீஸ்பூன், ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், தேங்காய் துருவல் - 2 டீஸ்பூன், உப்பு - ஒரு சிட்டிகை.

செய்முறை:
வெல்லத்தை சிறிதளவு நீரில் கரைத்து, வடிகட்டி எடுக்கவும். பச்சரிசி மாவில் உப்பு கலந்து, சிறிதளவு சுடுநீர் சேர்த்து கெட்டியாகப் பிசையவும். மாவு ஆறியதும், கையில் நெய் தடவிக் கொண்டு, மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, ஆவியில் வேக வைத்து எடுக்கவும். பாலை சுண்டக் காய்ச்சவும். 3-ல் இரண்டு பாகமாக வந்ததும், வெல்லக் கரைசலை சேர்த்துக் கொதிக்கவிடவும். கொதித்து வரும்போது ஆவியில் வேக வைத்த உருண்டைகளை மெதுவாக போடவும். மீண்டும் ஒரு கொதி வந்ததும் தீயை நிறுத்திவிடவும். பிறகு, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலக்கவும். தேங்காய் துருவல் தூவி அழகுபடுத்தவும்.

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 227446
  • Total likes: 29057
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ 30 வகை மில்க் ரெசிபி! ~
« Reply #27 on: January 30, 2014, 06:10:35 PM »
சாக்லேட் மில்க் பர்ஃபி




தேவையானவை:
 கண்டென்ஸ்டு மில்க் (மில்க்மெய்ட்) - ஒரு டின், நெய் - 2 டேபிள்ஸ்பூன், கோகோ பவுடர் - ஒரு டீஸ்பூன், சர்க்கரை - அரை கப்புக்கு கொஞ்சம் குறைவாக.

செய்முறை:
கடாயில் நெய் விட்டு உருகியதும், கண்டென்ஸ்டு மில்க் சேர்க்கவும் (தீ குறைவாக இருக்கட்டும்). இதில் சர்க்கரை சேர்த்து கலக்கவும். எல்லாம் சேர்ந்து இறுகிவரும் நேரம் கோகோ பவுடரை சேர்த்துக் கலக்கவும். கெட்டியாக வரும்போது நெய் தடவிய தட்டில் பரவலாக விடவும். ஆறியதும் துண்டுகள் போடவும். சதுரமாக துண்டு போடலாம். நீள வாட்டில் (ஓவல் ஷேப்பில்) உருட்டலாம். அல்லது சாக்லெட் பேப்பரில் ஒரு நீளமான துண்டு வைத்துச் சுற்றலாம்.

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 227446
  • Total likes: 29057
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ 30 வகை மில்க் ரெசிபி! ~
« Reply #28 on: January 30, 2014, 06:12:31 PM »
கஸ்டர்டு மில்க் ஃப்ரூட்




தேவையானவை:
பால் - அரை லிட்டர், கஸ்டர்டு பவுடர் - 4 டீஸ்பூன், சர்க்கரை - அரை கப், பழ துண்டுகள் (ஆப்பிள், வாழை, ஆரஞ்சு, கிரேப்ஸ்) - ஒரு கப்.

செய்முறை:
100 மில்லி அளவு பாலில் கஸ்டர்டு பவுடரை கரைத்துக் கொள்ளவும். மீதமுள்ள பாலை நன்கு காய்ச்சி... சர்க்கரையை சேர்த்துக் கலக்கவும். பால் பாதியாக வற்றியதும் கஸ்டர்டு கலந்த பாலை விட்டு, தீயை குறைவாக வைத்து 5 நிமிடம் கைவிடாது கிளறி, நன்கு கலந்து வந்ததும் இறக்கி, ஆறவிடவும். பிறகு பழத்துண்டுகளை அதில் கலக்கவும். அப்படியே ஃப்ரிட்ஜில் குளிர வைக்கவும். தேவையானபோது எடுத்து பரிமாறலாம்.

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 227446
  • Total likes: 29057
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ 30 வகை மில்க் ரெசிபி! ~
« Reply #29 on: January 30, 2014, 06:15:31 PM »
திரட்டுப் பால்




தேவையானவை:
பால் - ஒரு லிட்டர், வெல்லம் - 100 கிராம்.

செய்முறை:
பாலை அடிகனமான கடாயில் ஊற்றிக் காய்ச்சவும். பால் குறுகி முக்கால் பாகமாக வந்ததும் வெல்லம் சேர்த்து, அடுப்பை மிதமான தீயில் வைத்துக் கிளறவும். பாலும் வெல்லமும் கரைந்து சேர்ந்து, கெட்டியாக வந்ததும் இறக்கவும். நன்கு ஆறியதும் எடுத்து டப்பாவில் வைக்கவும். ஆறியதும் உதிரியாக வரும். நீண்ட நாள் கெடாது.