வெற்றி என்பது
ஒரு இலக்கல்ல அது
தவறுகளின் திருத்தம்
தடைகளைத் தாண்டிய விடியல்
சோதனை வடுக்களையும்
வேதனை வலிகளையும்
வெளிஉலகுக்கு மறைத்திடும்
சாதனை ஓர் முகமுடி
வெற்றி என்பது சிலருக்கோ
சாகச முத்திரைகள் பலருக்கோ
சோதனை படிகளில்
கால் வலிக்க பதித்திட்ட
சாதனைச் சுவடுகள்
சின்ன நூலிடை
சிறுவாயில் தான் பிடித்து
சிறிதும் சளைக்காமல் பின்னுகிற
சிலந்தியைப் போல
சிறுகச்சிறுக எடுத்து வைக்கும்
செங்கல் தான்
சிங்கார மாளிகையாய்
செழித்து நிற்க முடியும்
துணிவெனும் வலைபின்னு
தவறுகளைத் திருத்தி
தொடர்ந்து நட அது
வீரத்தின் விளைவாகும்
வெற்றியின் விதையாகும்