Author Topic: ~ வாழைத்தண்டு மோர் ~  (Read 670 times)

Offline MysteRy

~ வாழைத்தண்டு மோர் ~
« on: January 17, 2014, 10:47:22 AM »
வாழைத்தண்டு மோர் 



தேவையானவை:
புளிக்காத மோர் - ஒரு டம்ளர், நறுக்கிய வாழைத்தண்டு - கால் கப், கொத்தமல்லி - சிறிதளவு, உப்பு - ருசிக்கேற்ப, பூண்டு - பாதி, சின்ன வெங்காயம் - 1.

செய்முறை:
எல்லாப் பொருட்களையும் மோர் சேர்த்து மிக்ஸியில் அரைத்து வடிகட்டிப் பயன்படுத்தவும்.

குறிப்பு:
பூண்டு வாசம் பிடிக்காதவர்கள், தவிர்த்துவிடலாம்.