Author Topic: ~ ஓட்ஸ் சாண்ட்விச் !~  (Read 378 times)

Offline MysteRy

~ ஓட்ஸ் சாண்ட்விச் !~
« on: January 14, 2014, 02:34:38 PM »
ஓட்ஸ் சாண்ட்விச் !




தேவையானவை:

பிரெட் துண்டுகள் - 6, ஓட்ஸ் - ஒரு கப், துணியில் கட்டித் தொங்கவிட்டு எடுக்கப்பட்ட கெட்டித் தயிர் - ஒரு கப், பச்சை மிளகாய் - 3, இஞ்சி - சிறிய துண்டு, நறுக்கிய கொத்தமல்லி - ஒரு கப், சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன், வெந்தயத்தூள் - கால் டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப, உருளைக்கிழங்கு சிப்ஸ் - ஒரு கப் (விருப்பப்பட்டால்).


செய்முறை:

ஓட்ஸை வெறும் வாணலியில் சூடு வர புரட்டி எடுத்து, மிக்ஸியில் உடைக்கவும். கொத்தமல்லி, இஞ்சி, பச்சை மிளகாயை சுத்தம் செய்து, மிக்ஸியில் சேர்த்து, தண்ணீர் விடாமல் அரைக்கவும். அகலமான பாத்திரத்தில் தயிர், தேவையான உப்பு, அரைத்த கொத்தமல்லி விழுது, வெந்தயத்தூள், சீரகத்தூள் உடைத்த ஓட்ஸ் சேர்த்து நன்கு கலக்கவும். இந்தக் கலவையை கொஞ்சம் எடுத்து, பிரெட் ஸ்லைஸின் மேல் பூசவும்.  (விருப்பப்பட்டால்) நொறுக்கிய உருளைக்கிழங்கு சிப்ஸை மேலாக தூவவும். இதன்மேல் இன்னொரு பிரெட் வைத்துப் பரிமாறவும். மீதமுள்ள பிரெட் துண்டுகளையும் இதே போல் செய்துகொள்ளவும்.