நேந்திரம் பழம் - 2,
மிளகாய் - 5,
மிளகு - 1 டீஸ்பூன்,
சீரகம் - 1/2 டீஸ்பூன்,
தேங்காய் - 1/2 மூடி,
தேங்காய் எண்ணெய் - 2 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை,
வெந்தயம் - 1/2 டீஸ்பூன்,
உப்பு, எண்ணெய் - தேவைக்கு,
கடுகு, கறிவேப்பிலை - தாளிக்க.
எப்படிச் செய்வது?
நேந்திரம் பழத்தின் தோல் சீவி வட்டமாக நறுக்கி உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து வேக விடவும். வெறும் கடாயில் மிளகு, சீரகம், மிளகாய், வெந்தயத்தை சிவக்க வறுத்து, தேங்காயையும் சேர்த்து வறுத்து மிக்ஸியில் நீர் விட்டு அரைக்கவும். அதை வெந்த பழத்துடன் சேர்த்துக் கொதிக்க விடவும். தேங்காய் எண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை தாளித்துக் கொட்டி இறக்கவும்.