Author Topic: ~ ஆவாரம் பூ சூப்: ~  (Read 445 times)

Online MysteRy

~ ஆவாரம் பூ சூப்: ~
« on: January 07, 2014, 01:57:59 PM »
ஆவாரம் பூ சூப்:



தேவையான பொருட்கள்:

ஈர ஆவாரம்பூ – 1 கப்
(அ) உலர்ந்த ஆவாரம்பூ பொடி – 2 டீஸ்பூன்
தண்ணீர் – 250 மிலி
கேரட் – 1
பீன்ஸ் – 5
தக்காளி – 1
வெங்காயம் – சிறிது
இஞ்சி – சிறிது
பூண்டு – 2 பல்

கொத்தமல்லி, புதினா – சிறிது
மிளகுத்தூள், சீரகத்தூள், உப்பு – தேவையான அளவு

செய்முறை:

கேரட், பீன்ஸ், தக்காளி, வெங்காயம், இஞ்சி, பூண்டு, கொத்தமல்லி, புதினா முதலியவற்றை பொடியாக நறுக்கவும். தண்ணீரில் பூவைக் கலக்கவும். பிற காய்கறி கீரைகளைக் கழுவி நறுக்கி தண்ணீரில் கலந்து வேக வைக்கவும். நல்ல மணம் வரும் போது மசித்து அடுப்பை நிறுத்தி சூடு ஆறும் முன் வடிகட்டி உப்பு, மிளகுத்தூள், சீரகத்தூள் சேர்த்து பரிமாறவும்.