Author Topic: எரிக்காதே  (Read 821 times)

Offline Global Angel

எரிக்காதே
« on: November 22, 2011, 11:09:19 PM »
எரிக்காதே

மேற் படிப்பு
படிக்க வேண்டும்
பொருள் நிறைய
ஈட்ட வேண்டும்
பார் புகழ
பெருமையெல்லாம்
ஒருசேர பெற
வேண்டும் என
சொன்னான்
என் தம்பி

அவன் சிந்தை
நானறிந்து
ஆனந்த எல்லை
தொட்டேன்

பகலிரவு கண்விழித்து
படிக்கலானான் அவன்
நினைத்தது போல்
படிப்படியாய் வெற்றிகளை
அடுக்கி வந்தான்

இவன் போல
மகவு வேண்டும்
என்று கூறி
ஊர் புகழ
உயர்ந்து நின்றான்

தற்ச்செயலாய்
அவனறையை கடக்கையிலே
புகை மூட்டம் நிறைந்திருக்க
நான் கண்டேன்
சன்னலதை திறந்து
வைத்தேன்

வெளியேற வழி
அறியாப் புகையெல்லாம்
ஒன்றுகூடி
சன்னல் வழி வெளியேறி
அறைதனையே விட்டகன்றதுவே
புகைக்கு ஆசை
சுதந்திரமாய் பறந்து ஓட

நுரையீரலுக்குள்
சென்ற புகை வெளியேற
வழியறியா
அடைத்து வைத்து
காப்பாற்ற
நெஞ்சுக் கூடென்ன
புகைப் பெட்டகமா

கைவிரலின் இடுக்கத்தில்
மீந்திருந்த சிகரெட்
துண்டு ஒன்று அவன்
விரல் பொசுக்க
புகைந்துக்கொண்டே
விரல் நோக்கி
விரைந்தெரிய

இதையறியா என் தம்பி
உறக்கத்தில் ஆழ்ந்திருந்தான்
பகலெல்லாம்
உழைத்த சோர்வு அவன்
கண்ணயர காரணமோ
என்றே நான் நினைத்தபடி
நெருப்புத்துண்டை எடுத்தணைத்து
சன்னல்வழி வீசிவிட்டேன்

சிறிது நேரம் சென்றவுடன்
சன்னல் வழி
புகை லேசாய்
காற்றுடன் அறைக்குள்ளே
புகுந்து வர
அறை முழுதும்
காகித புகை நாற்றம்

நெருப்பை நான்
அணைத்தபோது என்
கவனமெல்லாம்
தம்பியையே நான்
நினைத்து இருந்ததனால்
நெருப்பை நான்
அணைக்காமல் அரைகுறையாய்
எறிந்ததுதான் காரணமோ

தன்னை அடுத்திருக்கும்
பொருளனைத்தும்
பொசுக்கிவிடும்
நற்பண்போ

நான் காண என் தம்பி
ஒரு நாளும்
புகை பிடித்ததில்லை
உலை வைக்க
அடுப்படிக்கு சென்றாலோ
தீ கண்டபோதென்னை
குலை நடுங்க
வைத்ததுவே

தம்பிக்கு கைச்
சுடகூடாதென
நான் அணைத்த
நெருப்பை அவன்
நெஞ்சு கூடு வேகாமல்
அணைப்பதற்கு
வழியுண்டா
என எண்ணி
திகைத்திருந்தேன்

புகை பிடித்தல்
பெரியோர் முன்
தவறென்று யார்
சொன்னார்

புகைபிடித்துப்
புண்ணாகும்
உன் நெஞ்சு அதனாலே
வருத்தம் தான்
அடைவாரே பெரியோரும்
காண்கையிலே

மனிதனவன் செத்த பின்னே
உயிர் மூச்சு
நின்ற பின்னே
வெற்றுடலாய் கிடக்கையிலே
புழு பூச்சு
தின்னும் முன்னே
துர் நாற்றமது வீசும்முன்னே
உடலுக்கு வைப்பாரே தீ
நீயோ
தன் கையால் தன்னுடலை
எரிப்பதற்கு
எங்கிருந்து கற்றாயோ

இக்கொடுமை பிறர்
கண்டால் இவன்
எனக்குத்தான்
கொள்ளிவைப்பான்
என்றிருந்தேன்

தனக்குத்தான்
கொள்ளி வைக்க
யாரிடத்தில் கற்றானோ
என எண்ணி
மாள்வாறே அல்லாமல்
வேறென்ன செய்திடுவார்.


padiththathil pidithathu  ;)
                    

Offline RemO

Re: எரிக்காதே
« Reply #1 on: November 23, 2011, 08:37:51 AM »
nice ;)

Offline Global Angel

Re: எரிக்காதே
« Reply #2 on: November 23, 2011, 03:19:22 PM »
Thanks ;)