Author Topic: ~ விரைவில் உடல் எடை குறைக்க வழிகள்! ~  (Read 496 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 227449
  • Total likes: 29057
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
விரைவில் உடல் எடை குறைக்க வழிகள்!


தினசரி உணவு பழக்கம் மூலமே உடல் எடையை குறைக்க முடியும் என்று ராமச்சந்திரா மருத்துவ கல்லூரியில் பணிபுரியும் டாக்டர் ஷைனி சந்திரா என்பவர் கூறியுள்ள உணவு முறை:
காலை: எழுந்த உடன் அத்திப்பழம். 5 பாதாம் , 2 டேட்ஸ் ; ஊற வைத்த வெந்தயம் தண்ணீரில் சாப்பிட வேண்டும். பத்து நிமிடம் கழித்து ஒரு டம்ளர் பால் குடிக்கலாம் காலை உணவு: Idli ராகி/ ஓட்ஸ் இவற்றில் ஏதேனும் ஒன்று அளவோடு சாப்பிட வேண்டும்.
காலை 11 மணிக்கு ; ஒரு டம்ளர் மோர்
மதியம்: 150 கிராம் காய்கறி, ஒரு கப் அரிசி சாதம், சாலட் இவை சாப்பிடலாம். அசைவம் எனில் வாரம் இரு முறை அளவோடு சாப்பிடலாம்
நான்கு மணிக்கு: கிரீன் டி. உப்பு கடலை அல்லது பொட்டு கடலை
எட்டு மணிக்குள்: சப்பாத்தி மற்றும் ஒரு கப் காய்கறி சாப்பிட வேண்டும்
இரண்டு மணி நேரம் கழித்து தான் உறங்க போக வேண்டும்.
இம்முறையில் ஒரு சில மாதத்தில் உடல் எடை குறைக்கலாம் .