Author Topic: ~ மஞ்சள் பூசணி உளுந்து ரொட்டி ~  (Read 449 times)

Offline MysteRy

மஞ்சள் பூசணி  உளுந்து ரொட்டி



தேவையானவை:
உளுத்தம்பருப்பு - ஒரு கப், மஞ்சள் பூசணிக்காய் துருவல் - 2 டீஸ்பூன், பொடித்த வெல்லம் - 2 டீஸ்பூன், தேங்காய் துருவல் - ஒரு டீஸ்பூன், அரிசி ரவை - 2 டீஸ்பூன், ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை, நெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
உளுத்தம்பருப்பை ஊற வைத்து, உப்பு போட்டு அரைக்கவும். மாவுடன் பொடித்த வெல்லம், தேங்காய் துருவல், அரிசி ரவை, மஞ்சள் பூசணிக்காய் துருவல், ஏலக்காய்த்தூள் ஆகியவற்றை கலக்கவும். அடுப்பில் தோசை தவாவை வைத்து ஒரு டீஸ்பூன் நெய் விட்டு, ஒரு கரண்டி மாவை ஊற்றி, மிதமான தீயில் வேகவிடவும். வெந்ததும் திருப்பிப் போட்டு, சுற்றிலும் ஒரு டீஸ்பூன் நெய் விடவும். ரொட்டி இரண்டு பக்கமும் சிவந்தவுடன் சூடாக எடுத்துப் பரிமாறவும்.