Author Topic: ~ இரவு உணவு: ~  (Read 426 times)

Offline MysteRy

~ இரவு உணவு: ~
« on: January 05, 2014, 10:39:57 AM »
அடை



தேவையானவை:
பச்சரிசி, புழுங்கலரிசி - தலா ஒரு டம்ளர், கடலைப்பருப்பு, துவரம்பருப்பு - தலா அரை டம்ளர், பாசிப்பருப்பு - கால் டம்ளர், காய்ந்த மிளகாய் - 6, பெருங்காயம் - சிறிய துண்டு, கடுகு - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - ஒரு ஆர்க்கு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு,

செய்முறை:
பச்சரிசி, புழுங்கலரிசி, கடலைப்பருப்பு, துவரம்பருப்பு, பாசிப்பருப்பு, காய்ந்த மிளகாய் ஆகியவற்றை கழுவி, பெருங்காயம் சேர்த்து, தண்ணீர் ஊற்றி நான்கு மணி நேரம் ஒன்றாக ஊற வைத்து... பிறகு, அரைத்துக் கொள்ளுங்கள். இதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து வைத்துக் கொள்ளுங்கள். கடாயில் எண்ணெய் ஊற்றி, கடுகு, கறிவேப்பிலை தாளித்து, அதனை அரைத்து வைத்த மாவோடு சேர்த்துக் கலந்து கொள்ளுங்கள். இனி, தோசைக்கல்லில் எண்ணெய் தேய்த்து, ஒரு கரண்டி அடை மாவை எடுத்து ஊற்றி வேகவிடுங்கள். மறுபக்கம் திருப்பி போட்டதும் சுற்றிலும் எண்ணெய் விட்டு எடுத்தால்... நடுவில் மெத்தென்றும், ஓரங்களில் க்ரிஸ்பியாகவும் வரும் இந்த அடை.
இதற்கு இட்லி மிளகாய்ப்பொடி அருமையான சைட் டிஷ்!