Author Topic: ~ காலை சிற்றுண்டி: ~  (Read 463 times)

Offline MysteRy

~ காலை சிற்றுண்டி: ~
« on: January 03, 2014, 06:59:00 PM »
ஆப்பம்



தேவையானவை:
 பச்சரிசி - ஒரு டம்ளர், உளுத்தம்பருப்பு - ஒரு கைப்பிடி அளவு, வெந்தயம் - ஒரு டீஸ்பூன், தேங்காய் - கால் மூடி, உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
பச்சரிசியை தனியாகவும்... உளுத்தம்பருப்பு, வெந்தயத்தை ஒன்றாகவும் எட்டு மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு, ஊற வைத்தவற்றோடு தேங்காயையும் சேர்த்து அரைத்து, இதில் தேவையான தண்ணீர் விட்டு, உப்பு சேர்த்து கரைத்து வைத்துக் கொள்ளுங்கள். அடுப்பில் ஆப்பச் சட்டியை  வைத்து சூடானதும், எண்ணெய் தடவி, கரண்டியால் மாவை எடுத்து நடுவில் ஊற்றி, கைகளால் சட்டியை நன்று சுழற்றுங்கள். மாவு சட்டி முழுவதும் உருண்டு வட்டமாக வரும். உடனே மீண்டும் அடுப்பில் வைத்து வேகவிட்டு எடுத்தால்... அருமையான மொறுமொறு ஆப்பம் ரெடி.
இதற்கு பொருத்தமான சைட் டிஷ் என்று பார்த்தால் தேங்காய்ப் பால்தான். தக்காளி குருமாவும் தொட்டுச் சாப்பிடலாம்.

Offline MysteRy

Re: ~ காலை சிற்றுண்டி: ~
« Reply #1 on: January 03, 2014, 07:00:40 PM »
தேங்காய்ப் பால்



தேவையானவை:
தேங்காய் - அரை மூடி, சுடுநீர் - 2 டம்ளர், ஏலக்காய்த்தூள், சர்க்கரை - சிறிதளவு.

செய்முறை:
தேங்காயை சுடுநீர் ஊற்றி அரைத்து, நன்கு பிழிந்து பால் எடுத்துக் கொள்ளுங்கள். இதில் சுவை மற்றும் தேவைக்கேற்ப சிறிதளவு ஏலக்காய்த்தூள் மற்றும் சர்க்கரையைக் கலந்துவிட்டால்... ஆப்பத்துக்கு அற்புதமான சைட் டிஷ் ரெடி.

Offline MysteRy

Re: ~ காலை சிற்றுண்டி: ~
« Reply #2 on: January 03, 2014, 07:02:24 PM »
தக்காளி குருமா



தேவையானவை:
நறுக்கிய தக்காளி, சின்ன வெங்காயம் - 2 கைப்பிடி அளவு, பட்டை, லவங்கம் - தலா 2, சோம்பு - அரை டீஸ்பூன், தேங்காய் - கால் மூடி, கறிவேப்பிலை - 2 ஆர்க்கு, கசகசா - 2 டீஸ்பூன், பச்சை மிளகாய் - 2, இஞ்சி - ஒரு சிறிய துண்டு, பூண்டு - 4 பல், முந்திரிப்பருப்பு - 4, மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், தனியாத்தூள் - 2 டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
கசகசா மற்றும் முந்திரிப்பருப்பை பத்து நிமிடம் வெந்நீரில் ஊற வைத்து,  மிக்ஸியில் நன்றாக அரைத்து... தேங்காய், பச்சை மிளகாய், பூண்டு, தோல் சீவிய இஞ்சி சேர்த்து நன்கு மையாக அரைத்து விடுங்கள். கடாயில் எண்ணெய் ஊற்றி, பட்டை, லவங்கம், சோம்பு தாளித்து, வெங்காயம் சேர்த்து நன்கு வதக்க வேண்டும். இதில் நறுக்கிய தக்காளியைப் போட்டு வதக்கி... தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ளுங்கள். இதோடு மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், தனியாத்தூள், உப்பு சேர்த்துக் கொதிக்கவிடுங்கள். இந்த கலவை நன்கு கொதித்து வரும்போது, அரைத்து வைத்த தேங்காய் விழுதை சேர்த்துவிடுங்கள். நன்கு வெந்து பச்சை வாசனை போனதும், கறி வேப்பிலை போட்டு இறக்கினால்... ஆப்பத்தோடு சாப்பிட அருமையான தக்காளி குருமா தயார்.