என்னென்ன தேவை?
செர்ரி பழங்கள் - 1 கப்,
கன்டென்ஸ்டு மில்க் - 1/2 டின்,
பனீர் - 100 கிராம்,
ஏலக்காய் தூள் - 1 டீஸ்பூன்,
எசென்ஸ் - சில துளிகள்,
நெய் - தேவையான அளவு.
எப்படிச் செய்வது?
செர்ரி பழத்தை தோல், விதை நீக்கி மிக்ஸியில் அரைத்து கன்டென்ஸ்டு மில்க், பனீரை சேர்த்து அடுப்பில் வைத்துக் கிண்டவும். ஏலக்காய் தூளும், எசென்ஸும் சேர்த்துக் கிளறி நெய் தடவிய தட்டில் கொட்டி டைமண்ட் வடிவில் வெட்டிப் பரிமாறவும்.