Author Topic: ~ வேர்க்கடலை ஃப்ளாக்ஸ் சீட்ஸ் பொடி ~  (Read 412 times)

Offline MysteRy

வேர்க்கடலை ஃப்ளாக்ஸ் சீட்ஸ் பொடி



தேவையானவை:
 வறுத்த வேர்க்கடலை - 100 கிராம், ஃப்ளாக்ஸ் சீட்ஸ் - 50 கிராம், காய்ந்த மிளகாய் - 6, உளுத்தம்பருப்பு - கால் ஆழாக்கு, பெருங்காயம் - ஒரு டீஸ்பூன், உப்பு - ருசிக்கேற்ப, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை:
 வெறும் கடாயில் ஃப்ளாக்ஸ் சீட்ஸைப் போட்டுப் பொரியவிட்டு எடுத்துக்கொள்ளவும். பிறகு, அதே கடாயில் உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், பெருங்காயம் என ஒவ்வொன்றாகப் போட்டு வறுத்து எடுத்து, ஆறியதும், உப்பு சேர்த்து எல்லாவற்றையும் ஒன்றாக அரைத்துக்கொள்ளவும்.
சாதத்தில் போட்டுப் பிசைந்து சாப்பிட, ருசியாக இருக்கும். விரும்பினால் முந்திரி சேர்க்கலாம்.

பலன்கள்:
புற்று நோய் உள்ளவர்களுக்கான சிறந்த ஊட்ட உணவு. உடல் எதிர்ப்பு ஆற்றலை அதிகரித்து, புற்றுநோய்க்கு எதிராக நம் உடலை மேம்படுத்தும். சர்க்கரை நோய், இதய நோய், பக்கவாதம் மற்றும் சிறுநீரக நோய்கள் போன்ற நாள்பட்ட நோய் உள்ளவர்களுக்கு எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கச் செய்வதற்கு சிறந்த ஊட்ட உணவு. சைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு ஒமேகா 3 கொழுப்பு அமிலங்களை அள்ளி வழங்கும் உணவு.