Author Topic: ~ கறிவேப்பிலைப் பொடி ~  (Read 512 times)

Offline MysteRy

~ கறிவேப்பிலைப் பொடி ~
« on: January 01, 2014, 05:08:45 PM »
கறிவேப்பிலைப் பொடி 



தேவையானவை:
கறிவேப்பிலை - 2 கப், சீரகம் - கால் கப், காய்ந்த மிளகாய் - 5, உளுத்தம்பருப்பு - அரை கப், எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்.

செய்முறை:
 கறிவேப்பிலையை எண்ணெயில் பொரித்துக்கொள்ளவும். மற்ற பொருட்களை வெறும் கடாயில் வறுத்து, ஆறியதும் பொடிக்கவும். இந்தப் பொடியை காலை டிபன், மதிய உணவு என எல்லா உணவோடும் பயன்படுத்தலாம்.

குறிப்பு:
மைக்ரோவேவ் அவெனில் கறிவேப்பிலையை வைத்துப் பொரித்தால், அதன் பச்சை நிறம் மாறாமல் இருக்கும்.

பலன்கள்:
சிறந்த சீரணத்துக்கான உணவு. மற்ற கடின உணவுகளின் சத்துக்களை உடலுக்கு முழுமையாகச் சேர்க்கும். கடின உணவு செரிமானம் ஆனபிறகு, குடலில் ஏற்படும் நஞ்சை நீக்கிவிடும். ரத்தசோகையைப் போக்கும். உடலில் நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகப்படுத்தும்.
« Last Edit: January 01, 2014, 07:13:51 PM by MysteRy »