விழியிலே என் விழியிலே,
கலந்தவள் நீயடி!
கனவிலே என் கனவிலே,
வந்தவள் தானடி!
எங்கும் நிழலாய் வந்தாயே,
உயிராய் என்னை நினைத்தாயே,
எந்தன் உயிராய் கலந்தாயே,
மடியில் நீயோ மிதந்தாயே!
அன்பால் என்னை நீ அனைதாயடி,
சிரிப்பால் உயிர் உருக வைத்தாயடி,
கரைகளில் கை பிடிதாயடி,
தனிமையில் என்னை நினைதாயடி!
அழகிய நேரங்கள் நீ இருந்தது,
தனிமையின் ஈரங்கள் இன்று நான் வாழ்வது,..
உனக்காய் இருந்தேனே,
உயிரால் வருட வைத்தாயே..,
மனதால் விலகியும்,
உயிரில் கலந்தவளே....!
விழியிலே என் விழியிலே,
கலந்தவள் நீயடி!
கனவிலே என் கனவிலே,
வந்தவள் தானடி!
இனி வாழவிருக்கும் தருனங்களோ உன் நினைவுகளில் மட்டுமடி!!!