என்னென்ன தேவை?
தர்பூசணித் துண்டுகள் - 1 கப்,
பனீர் - 1 கப்,
சர்க்கரை பொடி செய்தது - 1/2 கப்,
பைன் ஆப்பிள் எசென்ஸ் - சில துளிகள்.
எப்படிச் செய்வது?
பனீரை நன்கு பிசைந்து சர்க்கரை பொடியில் பாதியளவு கலந்து வைக்கவும். தர்பூசணி விதை நீக்கி, சர்க்கரையை கம்பி பதம் காய்ச்சி சேர்த்து கிண்டவும். பனீரில் பைன் ஆப்பிள் எசென்ஸ் சேர்க்கவும். ஒரு தட்டில் முதலில் பனீர் கலவை மேலே தர்பூசணிக் கலவையை பரப்பி, ஃப்ரிட்ஜில் 1 மணி நேரம் செட் செய்து துண்டுகள் போட்டுப் பரிமாறவும். பார்க்க அழகாகவும், சாப்பிட சுவையாகவும் இருக்கும் இந்த டிலைட்.