Author Topic: சுடுதண்ணி வைக்கிறதும் கொஞ்சம் கடினம் தான்..  (Read 1668 times)

Offline SowMiYa

  • Full Member
  • *
  • Posts: 179
  • Total likes: 23
  • Total likes: 23
  • Karma: +0/-0
  • Gender: Female
  • உன்னை அதிகமாக சந்தோஷப்படுத்தும் இதயத்திற்கு உன்னை அழவைக்கவும் உரிமை உண்டு.
    • http://www.friendstamilchat.com/chat/
யாராவது உங்க கிட்ட உங்களுக்கு சமைக்க தெரியுமான்னு கேட்டா சுடுதண்ணி தான் வைக்க தெரியும்னு கேலியா பதில் சொல்வோம் ஆனா சுடுதண்ணி வைக்கிறதும் கொஞ்சம் கடினம் தான்..

சுடு தண்ணி கொதிக்க வைக்கும் போது நல்லா தண்ணி கொதிக்கனும், லேசா கொதிக்கும் போது அடுப்ப அமத்திட கூடாது. சரியா கொதிக்க வைக்காத தண்ணீரில் அதிக கிருமிகள் இருக்கும்.

சுடு தண்ணிய குடிக்க குடுக்கும் போது அதிக சூடு இருக்குன்னு சுடவைக்காத தண்ணீர கலக்க கூடாது.

கொதிச்சுட்டு இருக்க தண்ணில ஏற்க்கனவே கொதிக்க வச்சு ஆறிய தண்ணிய ஊத்தக்கூடாது.

குழந்தைங்களுக்கு பால் கலக்கும் போது பால் சூடா இருக்குன்னு அதுல பச்சத்தண்ணி ஊத்தக் கூடாது.

இந்த தகவல்கள் நம்மில் பலருக்கு தெரியாது.