Author Topic: ~ உங்களுடைய கண்ணை நீங்கள் பாதுகாத்துக்கொள்ள சில வழிகள்:- ~  (Read 562 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 227428
  • Total likes: 29056
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
உங்களுடைய கண்ணை நீங்கள் பாதுகாத்துக்கொள்ள சில வழிகள்:-



மனிதனுக்கு பல்வேறு உறுப்புக்களின் பயன்பாடுகள் அவசியமாகவிருந்தாலும் அவனுடைய கண் மூலமாகவே இந்த உலகத்தைப் பார்க்கின்றான். அதன்மூலமாக வாழ்க்கையில் பல்வேறு மகிழ்ச்சியடைகின்றான் அவை இல்லாமல் போனால் எவ்வாறு இருக்கும்.

சிலருக்கு ஒரு கண் மட்டும் அடிக்கடிதுடிக்கும்.கண்கள்துடிப்பதற்கு, உடலில் ஒருசிலபிரச்சனைகள் உள்ளது என்பதற்கானஅறிகுறியாகும். அதுமட்டுமல்லாமல்,கண்கள் துடிப் பதற்கு “மயோகிமியா” (myokymia) என்று பெயர். இத்தகைய கண்துடிப்பு அல்லது தசைச் சுருக்கம் ஏற்படுவதற்கு அதிகப்படியான மன அழுத்தம்,தூக்கமின்மை, அதிகமாக காப்ஃபைன் உட்கொள்ளுதல் மற்றும் பலகாரணங்களாகும். சிலருக்கு கண் துடிப்பான து ஒரு வாரம் அல்லது ஒரு மாதம்கூட இருக்கலாம். சரி, இப்போது இந்த கண் துடிப்பு ஏற்படுவதற்கான காரணங்கள்என்னவென்று பார்ப்போம்.

மன அழுத்தம்:-

மன அழுத்தமானது அதிகம் இருந்தாலும் கண்கள் துடிக்க ஆரம்பிக்கும். எனவே மன அழுத்ததைக்குறைக்கும் செயல்களில் ஈடுபட் டால்,அடிக்கடி கண்கள் துடிப் பதைதவிர்க்கலாம்.

தூக்கமின்மை:-

மன அழுத்தம் அதிகம் இருந்தால்,தூக்கமின்மை பிரச்சனையை சந்திக்கநேரிடும். இவ்வாறு சரியான தூக்கம்இல்லாவிட்டால், கண்களானதுதுடிக்கும்.

கண்களுக்கு சிரமம்:-

கண்களுக்கு அதிகப்படியானசிரமத்தைக் கொடுத்தாலும், கண்கள்துடிக்க ஆரம்பிக்கும். உதாரணமாக,படிக்கும் போது சரியாக தெரியாவிட்டால்,அப்போது கண்களை பரிசோதித்து, அதற்குகண்ணாடிகளை போடாமல், சிரமப்படுத்திஅப்படியே படித்து கண்க ளுக்கு சிரமம்கொடுத்தாலும், கண்கள் துடிக்கும். மேலும்நீண்ட நேரம் கம்ப்யூட்டர் அல்லதுமொபைல்களை பார்த்துக் கொண்டே இருந்தால், கண்கள் களைப்படைந்துவிடும். இதனால் கண்களுக்கு அழுத்தம் ஏற்பட்டு துடிக்கஆரம்பிக்கும்.

ஆகவே கம்ப்யூட்டர் அல்லதுமொபைல் பயன்படுத்தும் போது, சரியானகண்ணாடிகளை அணிந்து கொண்டுபயன்படுத்தினால், கண் துடிப்பில் இருந்துவிடுபடலாம்.

காப்ஃபைன்:-

அதிகமாக காப்ஃபைன் உள்ளபொருட்களான கோப்பி, டீ போன்றவற்றைஅருந்தினாலும், கண்கள் துடிக்க ஆரம்பிக்கும். எனவே இத்தகைய பொருட்களை அதிகம் பருகுவதை தவிர்ப் பதுநல்லது.

ஆல்கஹால்:-

ஆல்கஹாலை அதிகம் குடிக்கும் பழக்கம்உள்ளவர்களுக்கு, கண்கள் துடிக்கும்.ஆகவே ஆல்கஹாலை அதிகம்பருகாமல், மருந்து போன்று எடுத்துக்கொள்வது நல்லது.

கண் வறட்சி:-

கண் வறட்சியினாலும், கண்கள் துடிக்கஆரம்பிக்கும். போதிய தண்ணீர் பருகாமல்இருப்பது, கம்ப்யூட்டர் முன் அதிக நேரம் இருப்பது,காப்ஃபைன் உணவுப் பொருட்களை அதிகம்உட்கொள்வது, மன அழுத்தம், சோர்வுபோன்றவற்றால் கண்களானது வறட்சியடைகிறது.ஆகவே இத்தகைய செயல்களை தவிர்த்தால், கண்வறட்சியில் இருந்து விடுபட லாம்.

ஊட்டச்சத்து குறைபாடு:-

சில ஆய்வுகள் உடலில் ஊட்டச்சத்துகுறைபாடு இருந்தால் கண்களில் உள்ளதசைகள் துடிக்க ஆரம்பிக்கும் என்றுசொல்கிறது. அதிலும் மக்னீசியம் குறை பாடுஇருந்தால், கண்கள் துடிக்கும் என்றுகூறுகிறது. ஆகவே சரியான ஊட்டச்சத்துநிறைந்த உணவு முறைகளைமேற்கொண்டால், கண்கள் துடிப்பதைதவிர்க்கலாம்.

அலர்ஜி:-

சிலருக்கு கண் அலர்ஜிகள் ஏற்படும்.கண் அலர்ஜிகளான கண்களில்அரிப்பு, வீக்கம், கண்கள் சிவப்பாகிகண்ணீர் வடிதல் போன்றவற்றின்போது, கண்களை தேய்த்தால்வெளிவரும் ஹிஸ்டமைன் கண்திசுக்களில் நுழைந்து, கண்களைதுடிக்க வைக்கும். ஆகவே கண்அலர்ஜி இருந்தால், அப்போது தேய்க்காமல், கண் மருத்துவரை அணுகி, சரியானமருந்துகளை எடுத்துக் கொண்டால், கண் துடிப்பில் இருந்து விடுபடலாம்.