Author Topic: கொய்யா ஸ்பிரிட்ஸர்  (Read 408 times)

Offline kanmani

கொய்யா ஸ்பிரிட்ஸர்
« on: November 28, 2013, 10:55:06 AM »

என்னென்ன தேவை?

கொய்யா - 2,
இஞ்சி - அரை அங்குலத் துண்டு,
எலுமிச்சைச்சாறு - 2 டீஸ்பூன்,
சர்க்கரை - தேவைக்கேற்ப,
சோடா - தேவைக்கேற்ப.
எப்படிச் செய்வது?

கொய்யாவைக் கழுவி வெட்டவும். இஞ்சியைத் தோல் நீக்கிப் பொடியாக நறுக்கவும். கொய்யாப் பழத்துடன், இஞ்சி சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு  அரைக்கவும். அதை வடிகட்டி, விதை களை நீக்கவும். அதில் சர்க்கரையும் எலுமிச்சைச்சாறும் சேர்த்துக் கலக்கவும். ஒரு கண்ணாடி பாட்டிலை நன்கு  கழுவி, வெயிலில் காய வைத்து அதில் இந்த கொய்யா சிரப்பை நிரப்பி வைக்கவும். ஒரு டம்ளரில் பாதி அளவு கொய்யா சிரப் எடுத்து, மீதியை  குளிர்ந்த சோடாவால் நிரப்பவும். நன்கு கலந்து, உடனடியாகப் பரிமாறவும். இந்த கொய்யா சிரப்பை ஃப்ரிட்ஜில் 1 வாரம் வரை வைத்து  உபயோகிக்கலாம்.