Author Topic: ~ பார்லி பிரிஞ்சால் சூப் ~  (Read 483 times)

Offline MysteRy

பார்லி  பிரிஞ்சால் சூப்



தேவையானவை:
கத்திரிக்காய் - 400 கிராம், ஜவ்வரிசி - 2 டீஸ்பூன், வெங்காயம் - ஒன்று, பூண்டு - 6 பற்கள், மிளகு - ஒரு டீஸ்பூன், பார்லி - 4 டீஸ்பூன், வெண்ணெய் - 50 கிராம், தேங்காய்ப் பால் - ஒரு கப், உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை:
விதை இல்லாத கத்திரிக்காயாக தேர்ந்தெடுத்து காம்புடன் நெருப்பில் சுட்டு... தோல், காம்பு நீக்கி மசித்து வைக்கவும். வெங்காயம், பூண்டு, மிளகு, உப்பு ஆகியவற்றைச் சேர்த்து அரைக்கவும். பார்லியை வறுத்து மாவாக அரைக்கவும்.

வாணலியில் வெண்ணெய் விட்டு, நுரைத்ததும் அரைத்த மசாலாவைப் போட்டு வதக்கவும். பின்னர் மசித்த கத்திரிக்காயைச் சேர்த்து வதக்கவும். பார்லியை நீர்விட்டு கரைத்துச் சேர்க்கவும். இதை ஆறவைத்து, மிக்ஸியில் அரைத்து வடிகட்டவும். பரிமாறும் முன்பு தேங்காய்ப் பால் சேர்த்துசூடுபடுத்தி, ஜவ்வரிசியை பொரித்துச் சேர்க்கவும்.