முறை 1:
1. இட்லி அரிசி - 4 கப்
2. வெள்ளை முழு உளுந்து - 1 கப்
3. அவல் - 1 கப்
4. சாதம் - 1 கைப்பிடி
5. தயிர் - 2 மேஜைக்கரண்டி
6. உப்பு
முறை 2:
1. உளுந்து - 2 கப்
2. இட்லி ரவை - 5 கப்
3. வெந்தயம் - 1 தேக்கரண்டி
4. சாதம் - 3 மேஜைக்கரண்டி [விரும்பினால்]
5. உப்பு
முதல் முறையில் செய்ய, அரிசியை கழுவி 4 - 5 மணி நேரம் ஊற விடவும்.
உளுந்து கழுவி 2 மணி நேரம் ஊற விடவும். அவலையும் கழுவி 2 மணி நேரம் ஊற விடவும்.
முதலில் உளுந்தை வழக்கம் போல பொங்க பொங்க அரைத்து எடுக்கவும்.
பின் அரிசி, அவல் மற்றும் சாதத்தை தயிர் சேர்த்து அரைத்து எடுக்கவும்.
இரண்டையும் கலந்து உப்பு சேர்த்து வழக்கம் போல இரவு முழுவதும் புளிக்க விடவும்.
இரண்டாவது முறைப்படி செய்ய, உளுந்தை கழுவி வெந்தயம் சேர்த்து 2 - 3 மணி நேரம் ஊற விடவும்.
இட்லி ரவையை 1 மணி நேரம் ஊற விடவும்.
உளுந்தை அரைக்கும் போது கடைசியாக சாதம் சேர்த்து பொங்க பொங்க அரைத்து எடுத்து ஊறிய இட்லி ரவையை நீர் இல்லாமல் வடித்து பிழிந்து மாவில் கலந்து கொள்ளவும்.
இத்துடன் உப்பு சேர்த்து கலந்து வழக்கம் போல இரவு முழுவதும் புளிக்க விடவும்.
மாவு புளித்த பின் இட்லி ஊற்ற வழக்கம் போல கலந்து விட்டு ஊற்றலாம்.
இது வழக்கமான இட்லியை விட மிகவும் மிருதுவாக இருக்கும். கூட 2 இட்லி சாப்பிட வைக்கும்.