Author Topic: வெள்ளரிப்பழ டெஸர்ட்  (Read 433 times)

Offline kanmani

வெள்ளரிப்பழ டெஸர்ட்
« on: November 19, 2013, 11:20:41 PM »
என்னென்ன தேவை?

வெள்ளரிப்பழம் - 1,
பிரெட் - 6 ஸ்லைஸ்,
சர்க்கரை - 1/2 கப்,
பால் பவுடர் - 2 டீஸ்பூன்,
கன்டென்ஸ்டு மில்க் - 1/4 கப்,
போர்ன்விடா பவுடர் - 2 டீஸ்பூன்,
வறுத்துப் பொடியாக வெட்டிய பாதாம்,
முந்திரி - 2 டீஸ்பூன்,
செர்ரி பழங்கள் - அலங்கரிக்க.

எப்படிச் செய்வது? 

பிரெட்டின் ஓரங்களை வெட்டி எடுத்துவிட்டு, வெள்ளைப் பகுதியை மிக்ஸியில் பொடியாக்கவும். பின்பு போர்ன்விடா, பால் பவுடர், 2 டீஸ்பூன் சர்க்கரை  போட்டு மிக்ஸியில் ஒன்றாகப் பொடி செய்து, பிரெட் தூளுடன் கலக்கவும். வெள்ளரிப் பழத்தின் தோல், விதை நீக்கி மசித்து 2 டீஸ்பூன் சர்க்கரையை  பொடி செய்து அதனுடன் கலக்கவும். ஒரு கண்ணாடி பாத்திரத்தை எடுத்து முதலில் பிரெட் தூள், அடுத்து வெள்ளரிப்பழக் கலவை என மாறி மாறி  போட்டு பிரெட் தூளுடன் நிறுத்தி, மேலே கன்டென்ஸ்டு மில்க் ஊற்றி பருப்பு வகைகளை தூவி சில மணி நேரம் ஃபிரிட்ஜில் வைத்து செட் ஆனவுடன்  செர்ரி பழத்தால் அலங்கரித்துப் பரிமாறவும்.