Author Topic: முலாம்பழக் குழம்பு  (Read 664 times)

Offline kanmani

முலாம்பழக் குழம்பு
« on: November 19, 2013, 11:18:35 PM »
முலாம்பழக் குழம்பு


என்னென்ன தேவை?

முலாம்பழம் - 1 கப்,
புளி - எலுமிச்சை அளவு,
வெங்காயம் - 1,
பூண்டு - 3 பல்,
மிளகாய் - 4,
தேங்காய் துருவல் - 1/2 கப்,
உப்பு, எண்ணெய் - 2 டீஸ்பூன்,
கடுகு, உளுந்து,
கறிவேப்பிலை - தாளிக்க.
எப்படிச் செய்வது?

தேங்காய், பூண்டு, மிளகாய் சேர்த்து அரைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுந்து, கறிவேப்பிலை தாளித்து, நறுக்கிய வெங்காயம் சேர்த்து  வதங்கியதும், முலாம்பழத் துண்டுகளை சேர்த்து வதக்கவும். அரைத்த விழுதையும் சேர்த்து நன்கு வதக்கி, சிறிதளவு நீர், உப்பு சேர்த்து வேக விடவும்.  புளியைக் கரைத்து ஊற்றி கொதி வந்தவுடன் இறக்கவும். சாதம், இட்லி, தோசைக்கு தொட்டுக் கொள்ளலாம்.